districts

img

மேற்கூரை ஓட்டையால் பேருந்துக்குள் குடைபிடிக்கும் பயணிகள்

உதகை, செப்.6- கூடலூர் - ஈரோடு இடையே இயக்கப் படும் அரசு பேருந்துகளின் மேற்கூரை ஓட்டையால் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகு கிறது. இதனால் பயணிகள் நனைந்தபடியும்,  சிலர் குடைபிடித்தபடியும் பயணம் செய்து  வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூரிலிருந்து சுற்று வட்டார பகுதிகளுக்கும், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பேருந்துகள் மிகவும் பழுத டைந்து காணப்படுகிறது. பயணிகளுடன் செல்லும்போது பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. தொடர்ந்து மேற்கூரைகள், இருக்கைகள், படிக்கட்டுகள் பல இடங்க ளில் உடைந்து காணப்படுகிறது. மேலும்  மழை பெய்யும் சமயத்தில் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இருக்கை களில் அமர்ந்திருக்கும் பயணிகள் நனைந்த படி பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடலூர் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பேருந்து ஈரோட்டிலிருந்து பயணிகளுடன் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு முதல் மேட்டுப்பாளையம் வரை தொடர் கனமழை பெய்தது. மேலும் பேருந்தின் மேற்கூரை மிக வும் பழுதடைந்து இருந்ததால், அனைத்து இருக்கைகளின் மீதும் மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள், குழந்தைகள் நனை யும் அவல நிலை காணப்பட்டது. சிலர் தங்க ளது கைகளில் வைத்திருந்த குடைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பேருந்து நடத்துநரிடம் புகார் தெரிவித்தனர். அவரும் வேறு வழியின்றி பயணிகளின் அதிருப்தியை சமாளித்தபடி இருந்தார். ஒரு கட்டத்தில் பயணிகள், வேறு பேருந்தை கூடலூருக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து மேட் டுப்பாளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப் பட்டது. இதன்பின் வேறு பேருந்து மூலம் பயணிகள் கூடலூர் சென்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தொலைதூரங்க ளுக்கு இயக்கப்படும் பேருந்துகளை முறை யாக பராமரித்து இயக்க வேண்டும் என பய ணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;