districts

img

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம்

கோவை, செப்.6- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது  நடக்காத காரியம், அதற்கு தேர்தல்  ஆணையம் ஒப்புதல் தரவில்லை என கோவையில் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை, வஉசி மைதானத்தில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை சார்பில் மாநக ராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை, அமைச்சர் கேஎன்.நேரு, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது ரூ.11.8  கோடி மதிப்பீட்டில் 27 முடி வுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக் கப்பட்டது.  மேலும், ரூ.67.48 கோடி மதிப் பீட்டில் 558 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனா ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் வழங்கினர். பின்னர்  அவர் பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி யில் கோவை மாநகராட்சி முதலிடம்  பெற்றுள்ளது. குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம்பெற்றுள்ளது. குடிநீர் பற்றாக்குறை இருந்த நேரத்தில், நமது கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், உடனடியாக கேரள அரசு டன் பேசுவதற்கான முயற்சி  மேற்கொண்டார். இதனையடுத்து, கேரள அரசுடன் பேசி சிறுவாணி அணையில் இருந்து முறையாக குடிநீர் பெற்று தரப்பட்டது. பில் லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும். அக்டோ பரில் இருந்து கோவைக்கு தினந் தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்  வழங்கப்படும். கடந்த 10 ஆண்டு களில் ரூ.10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 சதவிகித மக்கள் நகரத்தில் தான் இருக்கின்றனர். செய்ய வேண்டிய கடமைகளை நாங்கள் செய்கிறோம். அதற்கான  நன்றியை நீங்கள் காட்ட வேண் டும் என்றார்.  முன்னதாக இந்நிகழ்வில் பங் கேற்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசு கையில், கோயம்புத்தூர் மாநக ராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  அமல்படுத்துவதில், இந்தியாவி லேயே சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இந்த திட்டத்திற்கு உழைத்த அனை வருக்கும் பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் கோவைக்கு பல் வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். அவ ருக்கு என்னுடைய நன்றிகளை மாவட்ட மக்களின் சார்பாக தெரி வித்துக் கொள்கிறேன்” என்றார். முன்னதாக, செய்தியாளர் களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாநக ருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்எல்டி.

 குடிநீர் தேவை. ஆனால் 214  எம்எல்டி குடிநீர் தான் கிடைத்து  வருகிறது. பில்லூர் மூன்றாவது  கூட்டு குடிநீர் திட்டம் நிறைவே றப்போகிறது. அத்திட்டத்தில் இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி  உள்ளது. அப்பணிகள் சிக்கீரம் முடியும். 188 எம்எல்டி குடிநீர் கூடுத லாக வந்ததும் கோவை மாநக ருக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும். கோவை மாநகரில் 280 கி.மீக்கு சாலைகளை சீர மைக்க பணம் ஒதுக்கீடு செய்துள் ளளோம். உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ ரூ.10 கோடி தேவை யில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என பதில் சொல்லிவிட்டார். நாங் கள் திராவிட இயக்க கொள்கையை  100 வருடங்களாக பேசி வரு கிறோம். இவர்கள் புதிதாக ஆரம் பித்துள்ளார்கள்.  பாரத் என்றாலும், இந்தியா என் றாலும், நாங்கள் எப்போதும் போல  ஒன்றிய அரசு என்று தான் அழைப் போம் என நாடாளுமன்ற குழு  தலைவர் டி.ஆர்.பாலு சொல்லி யுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம். அதற்கு தேர்தல்  ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்றார்.  இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப்,  மற்றும் துணை மேயர் வெற்றிச் செல்வன்,  மண்டல தலைவர்கள், மாநகராட்சி உயர் அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.