மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா போராட்டம்
கோவை, டிச. 13 – தலித் மக்கள் வசிக்கும் குடியிருப் புகளை முழுமையாக ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள குடியிருப்புகளை புதுப்பித்து தர தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கிட வேண்டும் என் பதை வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளி யன்று தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் பலியா கினர். இச்சூழலில் கோவை மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மிக மோசமான நிலையிலேயே உள் ளன. இத்தகைய குடியிருப்புகளில் இருந்து மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகின்றனர். ஆகவே, தலித் மக் களின் குடியிருப்புகளை உடன டியாக ஆய்வு செய்ய வேண்டும். பழு தடைந்துள்ள தொகுப்பு வீடுகளை புதுப்பித்து தர போதிய சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கோவையில் பழுதடைந் ந்துள்ள பழைய கட்டிடங்களை கண்டறிந்து உடனடியாக அகற் றிட வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக் குழு வின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோவை சிவானந்தாகாலனி அருகே நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை தாங்கினார். இப் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பி னர் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.கருப்பையா, வி.பெரு மாள், கே.மனோகரன், எஸ்.கிருஷ் ணமூர்த்தி, ஆர்.வேலுசாமி, கே. அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுசெயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த தர்ணா போராட்டத்தில் திரளானோர் பங் கேற்று கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கஙகளை எழுப்பினர்.