districts

img

மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்கிடுக எல்ஐசி முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப்.12- மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தருமபுரியில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐஆர்டிஏ, முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொ ழிவை  கைவிட வேண்டும். எல்ஐசி முகவர்களுக்கு கிராஜி விட்டி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் எல்ஐசி முகவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் பெட்ரோல் அல வன்ஸ், பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தி னர் தருமபுரி எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்கத்தின் கிளை செயலாளர் ஜே.ரமேஷ்குமார் இந்த ஆர்ப்பட்டத்திற்க்கு தலைமை தாங்கினார்.  இதில், மாவட்ட தலைவர் கருணாநிதி, கோட்ட செயலா ளர் சிவமணி, கிளை செயலாளர் ஶ்ரீதர் ஆகியோர் உரையாற்றி னர். இதில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட  இணைச்செயலாளர் ஏ.மாதேஸ்வரன், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, சிஐடியு மாவட்ட நிர்வாகி அங்கம்மாள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.