districts

img

தாராபுரம் அருகே நந்தவனமாக உருமாறிய மயானம் சமூக நோய்க்கும் மருந்து தரும் மருத்துவர் லெனின்பாபு

தாராபுரம், ஜூலை 10 - மருத்துவப் பணியோடு சமூக நோய்  தீர்க்கும் பணியில் அக்கறை காட்டுகி றார் மருத்துவர் லெனின்பாபு. இவரது  முன்முயற்சியால் தாராபுரம் அடுத்த  இல்லியம்பட்டியில் உள்ள மயானம்  நந்தவனமாக உருமாற்றம் செய்யப்பட் டுள்ளது. இது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. தாராபுரம் - கரூர் சாலையில் உள்ள  கிராமம் இல்லியம்பட்டி. இந்த ஊரில் உள்ள மயானம் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந் தவந்தது. இந்நிலையில் இல்லியம்பட் டியை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் லெனின் பாபு ஊர் பொதுமக்களுடன் இணைந்து முன்முயற்சி எடுத்ததன் பலனாக பராமரிப்பின்றி இருந்த மயானம் பசுமை மயானமாகவும் நந் தவனமாகவும் உருமாற்றம் அடைந் துள்ளது. கேஎம்சிஎச் மருத்துவமனையில் எலும்பு மூட்டு மருத்துவ சிகிச்சை  நிபுணராக பணியாற்றி வருகிறார் லெனின் பாபு. இவரது முன்முயற்சி யால் கோவை கிழக்கு மற்றும் சிறு முகை ரோட்டரி, எஸ்ஐவி பள்ளி, ஸ்டான்லி 87 முன்னாள் மாணவர்கள் அமைப்பு, கேஎம்சிஎச் மருத்துவர் குழு,  விழுதுகள் பவுண்டேசன், காளிபாளை யம் நன்னயம் அறக்கட்டளை மற்றும் இல்லியம்பட்டி பொதுமக்களுடன் இணைந்து நந்தவனம் உருவாக்கப்பட் டுள்ளது.

இந்த மயானத்தில் இருந்த முள் செடிகள், கருவேலமரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு அப்பகுதியில் பூச்செடி கள் நிழல் தரும் மரங்கள் நடப்பட் டுள்ளன. அடக்கம் செய்ய தனி இடம்  ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து  மயானத்தில் அடக்கம் செய்த பிறகு சடங்குகள் செய்வதற்கு சிறு மண்டபம் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப் பட்டுள்ளது. மயானத்திற்குள் வைக்கப் பட்டுள்ள செடி, கொடிகளை பராமரிப்ப தற்கென ஊர் மக்களே காலை, மாலை  வேலைகளில் கிராமத்து தோட்டங்க ளில் வேலை செய்வது போல் ஈடுபாடு டன் செய்து வருகின்றனர். தற்போது மயானம் பசுமை மயானமாக பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இந்த நந் தவனம் தாராபுரம் வட்டாரத்தில் முன்மா திரியாக திகழ்ந்து வருகிறது. இன்றைய உலகில் கல்வி, வேலை  வாய்ப்புக்காக கிராமங்களை விட்டு குடி பெயர்ந்து நகர் பகுதியில் குடியேறு வது அதிகரித்துவிட்டது. நகர்ப்புறத்தில்  வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள் பெரும்பாலும் முன்னோர்கள் வாழ்ந்த பகுதிக்கு வருவதற்கு தயங்கும் காலச் சூழலில், தான் பிறந்த சொந்த ஊரின்  முன்னேற்றத்திற்காக சமூக பணியாற்றி  வருகிறார் மருத்துவர் லெனின்பாபு. இது ஊர் பொதுமக்களின் பாராட்டு களை பெற்றுள்ளது. இதற்கு முன்பு கொரோனா இரண் டாம் அலையின் தீவிரத்தால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சி ஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அறிந்து  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க தனது சொந்த நிதியுடன் ரோட் டரி சங்கங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதி திரட்டி ரூ 35  லட்சம் மதிப்பில் தாராபுரம் அரசு மருத்து வமனையில் ரூ. 30 லட்சத்தில் ஆக்ஜிசன்  உற்பத்தி இயந்திரம், ரூ. 5 லட்சம் மதிப் பில் ஜெனரேட்டர் வசதி அமைக்கப் பட்டு பயன்பாட்டில் உள்ளது. 

மேலும் அம்பேத்கர் கல்வி மையத் தில் குரூப் தேர்வுகள் எழுதும் மாணவர் கள் பயன்பெறும் வகையில் மடிக் கணினி (லேப்டாப்), கனிணி வாங்கி  தந்துள்ளார். இதேபோல் கரையூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 15 லட்சம் செலவில் 3டி ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், பழைய கட்டிடங் களை புதுப்பித்தும், புதிய மேசைகள், நாற்காலிகள், கணினிகள், மின் விசிறி கள், 800 சதுர அடிகளுக்கு பால்ஸ் சீலிங்,  சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் வசதி,  மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு சிசிடிவி கேமிரா, மண் தரை களை மாற்றி பேவர் பிளாக்ஸ் தரைகள்  அமைத்தல், கழிவறைகளை மராமத்து  செய்யும் பணிகளை செய்து தந்துள் ளார். மேலும் நோய் தீர்க்கும் இந்த மருத் துவர் தனது முன்முயற்சியில் பல்வேறு சமூக பணிகளை செய்து சமூக நோய்  தீர்க்கும் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

;