districts

img

தன்னம்பிக்கையின் நாயகனாக விளங்கும் இளைஞருக்கு பாராட்டு!

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவ ருக்கு தாய் மற்றும் உடன் பிறந்தவர்கள் என 4  பேர் உள்ளனர். இவருக்கு இரண்டு வயதில் ஏற் பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வை பாதிக்கப் பட்டு, சுமார் 6 வயதில் முற்றிலுமாக பார்வையை  இழந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போதிலும்,  குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறி யுள்ளனர். இதன்பின் அவரை தொண்டாமுத் தூர் பகுதியில் உள்ள அரசு பார்வையற்றவர்க ளுக்கான பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு சிறிது காலம் இருந்த அவர், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதற்கிடையே, அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். பார்வை மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், வீட்டில் இருந்த மின் சாதனங்களை பழுது பார்த்து சரி செய்வது போன்ற பணிகளில் ஆர்வம் காட்டி வந்துள் ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை, சரவணம்பட்டி பகுதிக்கு குடியேறிய நிலையில், அவரது சகோதரி ரேவதி இவரது ஆர்வத்தை பார்த்து அருகே உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்த்துள்ளார். அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை வாங்கி எழுதுவது, கடை யில் யாரும் இல்லாத போது பார்த்துக்கொள்வது என இருந்துள்ளார். அப்போது மின்சாதன பொருட்களை பழுது பார்ப்பதில் உள்ள ஆர் வத்தை கடை உரிமையாளரிடம் கூறியதால், சிறு சிறு வேலைகளை அவர் கற்றுக்கொடுத்துள் ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கவ னம் செலுத்தி எலக்ட்ரிக் பணிகளை கற்று  கொண்டார் சுரேஷ்குமார். ஒரு கட்டத்தில் யாரு டைய உதவியும் இல்லாமல் மிக்சி, குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, வாசிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகை யான மின்சாதன பொருட்களையும் பழுது பார்க் கும் பணிகளை செய்யத் துவங்கினார்.

பிறகு வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள் ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக யாருடைய உத வியும் இல்லாமல் மின்சாதன பொருட்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வரும் சுரேஷ்குமார் தனது வருமானத்தில் வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றை சமாளித்து வரு கிறார். இவரது தன்னம்பிக்கைக்கு வலு சேர்க் கும் விதமாக அவரது அக்கா ரேவதியின் முயற்சி யாக கவுண்டம்பாளையம் பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, கடந்த 6 மாதங்க ளாக தனது சொந்த கடையை நடத்தி வருகிறார். இவருக்கு அவரது நண்பர்களும் உறுதுணை யாக இருந்து வருகின்றனர். அப்பகுதியில் தன் னபிக்கையின் நாயகனாக வலம் வரும் சுரேஷ் குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், தானும் தனது தாயாரும் தற் போது வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகி றோம். தங்களுக்கு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கிய நிலையில், அதற்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டி யுள்ளதால், அதனை செலுத்த முடியாமல் கஷ் டப்பட்டு வருகிறோம். எனவே, மாவட்ட ஆட்சி யரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி செய்ய வேண் டும் என சுரேஷ்குமார் கோரிக்கை விடுத்துள் ளார். -எஸ்.கே.எம்.