districts

img

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு கே.எம்.சுப்ரமணியன் போட்டி

திருப்பூர், செப். 7 - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தேர்தல்  செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. கே. எம்.நிட்வேர் ஏற்றுமதி நிறுவன உரிமையா ளர் கே.எம்.சுப்ரமணியன் சங்கத் தலைவர் பத விக்குப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய் துள்ளார். அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில், ஏற்றுமதியாளர் சங்கத்தின் நிறு வனத் தலைவர் ஏ.சக்திவேல் வலியுறுத்தி, ஆதரவு தெரிவித்ததால் தலைவர் பதவிக்குப்  போட்டியிடுகிறேன். இத்துடன் என் கருத் திற்கு உடன்பாடு கொண்ட சக ஏற்றுமதி யாளர்கள் எனது தலைமையை ஏற்று, தேர்த லில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்த னர். அதன் அடிப்படையில் இன்று (புதன்கி ழமை) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.  உலகளவில் திருப்பூர் தனித்தன்மை யான இடத்தைப் பெற்றுள்ளது. அண்டை நாடுகளின் வளர்ந்து வரும் உற்பத்தி கேந் திரங்கள், உலகளாவிய மாற்றங்கள், கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட் டுள்ள வர்த்தக வாய்ப்புகள், தற்போது உல களாவிய பொருளாதார மந்தநிலை, அடிப் படை கட்டமைப்பில் செய்ய வேண்டிய மாற் றங்கள் உள்ளிட்ட விசயங்களில் பிரதான கவ னத்தை செலுத்துவோம். அடுத்து வரும் ஒவ் வொரு வருடமும் தற்போதைய வர்த்தக அள வைக் காட்டிலும் குறைந்தது 20 சதவிகித உற் பத்தி அளவை அதிகரிக்கும் முயற்சிகளைச் செய்ய திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர்  கூறியுள்ளார். அவருடன் துணைத் தலைவர்கள் பத விக்கு பெஸ்ட் ஆர்.ராஜ்குமார், எஸ்என்கியூ எஸ் இளங்கோவன், பொதுச் செயலாளர் பத விக்கு எஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் திருக்குமரன், இணைச் செயலாளர்கள் பதவிக்கு சைல்வின்  சின்னசாமி, ஈஸ்டன் குளோபல் கிளாத்திங் டி. குமார், பொருளாளர் பதவிக்கு ராயல் கிளா சிக் மில் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும், சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 20  பேரும் புதன்கிழமை வேட்பு மனுத் தாக்கல்  செய்துள்ளனர்.