districts

img

பெரியாயிபாளையத்தில் கே.தங்கவேல் நினைவகம்

அவிநாசி, மே 22- அவிநாசி அருகே உள்ள பெரி யாயிபாளையத்தில் தோழர் கே. தங்கவேல் நினைவகத்தை மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி  ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட் பட்ட பெரியாயிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் கே.தங்கவேல் நினைவகமாக புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா ஞாயிறன்று நடை பெற்றது. செங்கொடியை பழங் கரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.பழனிச்சாமி ஏற்றி  வைத்தார். இதையடுத்து தோழர்  கே.தங்கவேல் நினைவகத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் திறந்து வைத்தார். அலுவலக கல்வெட்டை மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் திறந்து வைத்தார். மேலும் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், கே.ரமணி, கே. தங்கவேல், கே.எஸ்.கருப்பசாமி, பி.ஏ.ராமசாமி, எம்.ரத்தினசாமி ஆகி யோரின் புகைப்படங்களை மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோ பால், ஒன்றிய கவுன்சிலர் பி.முத்து சாமி ஆகியோர் திறந்து வைத்த னர்.  முன்னதாக, பெரியாயிபாளை யம் பகுதி மூத்த தோழர் சேமலை யப்பனுக்கு, கே.பாலகிருஷ்ணன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அப் பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.