கோவை, ஜூன் 19- அரசு அலுவலகங்களுக்கே வராமல் ஆன்லைன் முறையில் பட்டா பெரும் நடை முறையை தமிழக அரசு எளிதாக்கி உள்ள சூழ லில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் பட் டாவை பதிவு செய்யும் போது திட்டமிட்டே தவறாக பதிவு செய்து, வட்டாட்சியர் அலு வலகங்களில் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில், ஒரு நிலத் தையோ, வீட்டையோ, வீட்டுமனையையோ அல்லது வேறு சொத்தையோ பதிவு செய்து வாங்குபவர், அதன் பரப்பாளவில் மாற்றங்கள் இல்லாமல் முழுச் சொத்தையும் வாங்கும் பட்சத்தில், உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையத்தில் புதுப்பிக்கப்படும். இது கடந்த மூன்று ஆண்டு களாக நடைமுறையில் இருந்து வருகிறது. பட்டா மாறுதுலுக்காக வட்டாட்சியர் அலு வலகத்திற்கு பல நாட்கள் அலைந்து நேரத் தையும், பணத்தையும் வீணடிக்கும் நடை முறைகளை மாற்றி பொதுமக்களுக்கு பயன் படும் வகையில் ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யும் வகையில் அரசு ஆணை வெளி யிட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. பத்திரப்பதிவு செய்த வுடன் தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய் யப்படும் விபரங்களை அரசு இணையதளத் தில் பார்த்து உத்தரவு நகல்களை பதிவிறக் கம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டு வரு கின்றனர். இந்நிலையில், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக பட்டா மாறு தல் செய்யப்படுகிறது. ஒருவர் முழுச்சொத் தையும் கிரையம் பெற்றாலும் அவரது பெயரை கிரையம் கொடுத்த நபரின் பெயரு டன் கூட்டாக சேர்த்து பட்டா மாறுதல் செய்யப் படுகிறது. இதனால் கிரையம் பெறுபவர் மீண் டும் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி கிரையம் கொடுத்த நபரின் பெயரை நீக்க விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படுகி றது. இது திட்டமிட்டு அலுவலகத்திற்கு வரவ ழைத்து லஞ்சம் பெருவதற்கான ஏற்பாடு எனவும், இது தமிழகத்தில் பல வட்டாட்சியர் அலுவலகங்களில் இதுபோன்ற தவறான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்கிற குற் றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கூறுகையில், என்னுடைய சொந்த அனுப வத்திலேயே இத்தகைய தவறாக திட்டமிட்டு பதிவு செய்து அலுவலகத்திற்கு அலைய வைத்த சம்பவத்தை அனுபவித்துள்ளேன். கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத் தில், சரவணம்பட்டி கிராமத்தில் காலிமனை இடத்தை முழுவதும் எனக்கு தெரிந்தவர் ஒரு வர் கிரையம் பெற்றுள்ளார். கிரையம் பெற்ற வருடன் சேர்ந்து கிரையம் கொடுத்தவரின் பெயரையும் கூட்டாக சேர்த்து கோயமுத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் உத்தரவு வழங் கியுள்ளார். இது தவறான உத்தரவு சொத்தை கொடுத்தவரின் பெயரை நீக்கிவிட்டு, சொத்தை வாங்குபவரின் பெயரை மட்டுமே பட்டா மாறுதல் செய்து இருக்க வேண்டும். இப்போது சம்மந்தப்பட்ட என்னுடைய உற வினர் கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக் கிறார். ஒரு சொத்தை முழுவதுமாக ஒருவர் கிரை யம் கொடுத்துவிட்டார் அந்த சொத்தில் அவ ருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. எனவே புதிதாக பட்டாவில் அவரது பெயர் இடம்பெறுவது சட்டப்படி குறறமாகும். இது போன்ற பல இனங்களில் பட்டா மாறுதல் உத் தரவு வழங்கப்படுகிறது. தமிழக அரசு உடன டியாக தலையிட்டு, தவறும் செய்யும் அலுவ லர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, இவ் விவகாரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என் றார்.