districts

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி

சென்னை, பிப்.23- தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமை யிலான கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி  மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல இடங் களில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் சென்னை  அண்ணா அறி வாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் பாரதி புத்தகாலயத்தில் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வெற்றியை பெற் றுள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் எந்த வித வன்முறைச் சம்பவங்களும் இன்றி,  முறைகேடுகளும் இன்றி நேர்மையாக,  அமைதியாக நடைபெற்றுள்ளது. இந்த  தேர்தல் துவங்கும் போதே தமிழக முதல மைச்சர் 100 விழுக்காடு வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது மக்கள் இந்த கூட்டணியை 100 விழுக்காடு வெற்றிபெற செய்வார்கள் என்பதை கண்கூடாக பார்த் தோம். ஒரு சில இடங்களில் மற்ற கட்சி கள் வெற்றி பெற்றிருந்தாலும் கூட மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 99.5 விழுக்காடு வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ளது.

அதிமுக புறக்கணிப்பு

2016 ஆம் ஆண்டு நடத்த வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தா மல் அந்த நிர்வாகத்தை அதிமுக சீர்கு லைத்து விட்டது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் உள்ளிட்ட பல பிரச் சனைகளுக்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் அதிமுகவை மக்கள் முற்றாக புறக்கணித்துள்ளார்கள்.

பாஜகவுக்கு இடமில்லை

அதேபோல் பாஜக தலைவர் அண்ணா மலை என்னென்னமோ உளறிக் கொண்டி ருக்கிறார். அவரையும் தமிழக மக்கள் ஒரு  கொட்டு கொட்டி ஓரமாக உட்கார வைத்தி ருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலை யிலும் பாஜகவுக்கு இடம் கிடையாது என் பதை இந்த தேர்தல் மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளது. இது மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி.

நேர்மையாக பாடுபடுவோம்

கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில் அதை செய்யவில்லை, இதை செய்ய வில்லை என்று சிலர் விமர்சனம் செய்தார் கள். 9 மாதங்களில் இந்த ஆட்சி செய்ய வேண்டியதை செய்துள்ளது, மீதமுள்ள காலங்களில் அனைத்து பணிகளையும் செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். உள் ளாட்சியில் ஒரு நல்லாட்சி மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாங்கள் நேர்மையாக பாடுபடுவோம். திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் வேட்பாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்க ளித்த அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ் வாறு அவர் கூறினார்.