தருமபுரி, டிச.10- அனைத்து ஊராட்சிகளும் நூறுநாள் வேலை திட்டத்தை செயல்படுத்திட வேண் டும் என பெண் விவசாய தொழிலாளர் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் பெண் தொழிலாளர்கள் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து இல்லத் தில் நடைபெற்றது. இப்பேரவைக்கு மாவட்ட தலைவர் வி.ரவி தலைமை வகித் தார். மாநில அமைப்பாளர் பி.வசந்தா மணி, மாவட்டசெயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் க.கே.முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.கோவிந்தசாமி, கே.எல்லப்பன், ரஜினி முருகன், வி.ஆறுமுகம் மற்றும் கிருஷ் ணவேணி, பாண்டியம்மாள், இந்திராணி ஆகியோர் பேசினர்.இதைத்தொடர்ந்து பேரவை கூட்டத்தில் மாவட்ட அமைப்பாள ராக ஜி.பாண்டியம்மாள் மற்றும் 11 பேர் கொண்ட அமைப்புக்குழு தேர்வு செய்யப் பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் விவசாய தொழிலாளர் களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை மற்றும் தினக்கூலியாக ரூ 600 வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி களுக்கும் இத்திட் டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.