திருப்பூர், மே 13- 2023- 2024இல் நடத்தப் பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தும் வழி காட்டும் நிகழ்வு திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர் தலைமை ஏற்றார். ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகி ருஷ்ணபுரம் மேல்நிலைப்பள்ளி, சின்னச் சாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் மேல்நி லைப்பள்ளி, குமார்நகர் மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் மேல்நிலைப்பள்ளி, பத்மாவதிபுரம் மேல்நிலைப்பள்ளி, வீர பாண்டி மேல்நிலைப்பள்ளி, இடுவம்பா ளையம் மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாண வர்களுக்கு ஊக்குவிப்பு மற்றும் வழிகாட் டுதல் நிகழ்வு நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் மதி.சத்யா, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு, ஜெயித்து காட்டுவோம் நிறுவனத் தலைவர் கவிதா ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவது எப்படி, உயர் கல்வி கற்பதற்கான வழிகாட்டுதல் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். தேர்வில் தேர்ச்சி அடையாத மாண வர்கள் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர் கல்வி கற்பதற்கு வழிமு றைகளை, ஆலோசனைகளை வழங்கினர்.