districts

img

செட்டிபாளையத்தில் கே.தங்கவேல் நினைவகம் திறப்பு

திருப்பூர், செப். 19 - திருப்பூர் வடக்கு ஒன்றியம் செட்டிபாளையத்தில் மார்க் சிஸ்ட் கட்சியின் கிளை அலு வலகமான தோழர் கே.தங்க வேல் நினைவகக் கட்டிடத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் திறந்து வைத்தார். முன்னாள் மாமன்ற உறுப் பினர் கே.மாரப்பன் தலைமை யில் நடைபெற்ற நிகழ்வில்  முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர்  பி.சிவசுப்பிரமணியம் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.  கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் ஆகியோர்  தலைவர்கள் படங்களைத் திறந்து வைத்தனர். சிஐடியு பஞ் சாலை சங்கத் தலைவர் கே.பழனிச்சாமி, கட்சியின் ஒன்றியச்  செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்  ஆ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.கோபால்,  என்.இளங்கோ, ஏ.சந்தோஷ், கே.வசந்தி உள்பட அப்பகுதி யினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக  எம்.ராமமூர்த்தி நன்றி கூறினார்.