கோவை, செப்.8- உலக கண்தானத்தை முன்னிட்டு, கோவையில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி சார்பில் வட கோவை பகுதியில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. உலக கண்தான தினம் செப்.25ஆம் தேதி கடை பிடிக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு கோவை யில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சந்தீஸ் துவக்கி வைத்தார். இதில் அகர் வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஜெயஸ்ரீ, மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர் பள்ளி மாணவர்கள் இணைந்து மனித சங்கிலி நடைபெற்றது. மேட்டுப்பாளையம் சாலையின் இரு புறங்களிலும் நின்ற மாணவர்கள், விழிகளை புதைத்துச் செல் லாமல், விதைத்துச் செல்வோம் என்று முழக் கங்களை எழுப்பி பொதுமக்கள் மத்தியில் கண்தானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சேலம்
உலக கண் தான விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, வாசன் கண் மருத்து வமனை சார்பில் சேலம், அம்மாபேட்டையில் பேரணி நடைபெற்றது. அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திலிருந்து துவங்கிய பேரணி, வாசன் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில் வாசன் கண் மருத்து வமனை மருத்துவர்கள் செந்தாமரை செல்வி, குமார நந்தா, மருத்துவமனை மண்டல மேலாளர் செல்வம் உட்பட 300க்கும் மேற் பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண் டனர்.