districts

img

கைவிடப்பட்ட ஆழ்குழாயில் மழைநீர் சேகரிப்பு: பள்ளி கிணற்றில் உச்சம் தொட்ட தண்ணீர்

திருப்பூர், டிச. 9 - திருப்பூர் பெம் பள்ளியில் கைவிடப்பட்ட ஆழ்குழா யில் மழைநீர் சேகரிக்கப்பட்டதால், நீர்மட்டம் குறைவாக  இருந்த கிணற்றில் நீர் ஊற்றெடுத்து உச்சம் தொட்டுள் ளது. திருப்பூர் காங்கேயம் சாலையில் பெம் ஸ்கூல் ஆப்  எக்ஸலன்சி  என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இப்பள்ளியில் 2013 ஆம் ஆண்டில் லாரி தண்ணீர் வாங்கி  அதை கிணற்றில் விட்டு பள்ளித் தேவைக்கு பயன்படுத்தி  வந்துள்ளனர். இப்பள்ளியில் 2014 ஆம் ஆண்டில் இருந்து  கைவிடப்பட்ட போர்வெல்லில் மழை நீரை சேகரிக்க உரிய ஏற்பாடு செய்து, மழைநீரை  சேகரிக்கத்  தொடங்கி னர். இதன் பயனாக, நீர்மட்டம் மிகக் குறைவாக இருந்த  இந்த பள்ளியின் கிணற்றில், சில வருடங்களில் நீர் வெகு வாக ஊறியது. தற்போது இந்த கிணற்றில் தண்ணீர் உச் சம் தொட்டுள்ளது. இரண்டு அடுக்குகளைத் தாண்டி, சுமார் 50 அடி வரை தண்ணீர் உள்ளது. தினம் 10 ஆயிரம்  லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இரண்டு மாதம் முன்பு  வரை மாதம் ரூ 40 ஆயிரத்திற்கு தண்ணீர் வாங்கி வந்த னர். இப்போது பள்ளித் தேவைக்கு லாரி தண்ணீர் வாங்கு வதை நிறுத்தி விட்டதாகவும், இது கைவிடப்பட்ட ஆழ்கு ழாயில் மழை நீர் சேகரிப்பால் விளைந்த பயன் என்றும்  பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.