districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீலகிரியில் காவலர்  வீரவணக்க நாள் அனுசரிப்பு

 உதகை, அக்.21- நீலகிரி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி  தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ் கலந்து கொண்டு மரி யாதை செலுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி  செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்.21 ஆம்  தேதியன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதன்படி, வெள்ளியன்று அந்தந்த மாநில தலை நகரங்களில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத் திலும் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக் கப்பட்டது. உதகை ஆயுதப்படை வளாகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில்  இந்தியா முழுவதும் பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் துப்பாக்கி குண்டுகள் முழங்கப் பட்டது. இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்  நவாஸ் கூறுகையில், மக்கள் சமுதாயத்தில் அமைதியாக, சுதந்திரமாக வாழவும், தீவிரவாதத்தை எதிர்த்தும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து  உள்ளனர். எனவே இன்றைய தினம் அவர்களது நினைவை  போற்றுவோம், என்றார். 

பயணியிடம் செல்போன் வழிப்பறி

கோவை, அக்.21- அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போன் பறித்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட ஓதிமலை சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் இருவரிடம் வழிகேட்பது போல் நடித்து செல்போன் பறித்துச்சென்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் உட்பட 3 பேரை  கைது செய்தனர். இதன்பின், அவர்களை நீதிமன்றத்தில்  முன்நிறுத்தி, சிறுவனை கோவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி யிலும், மற்ற இருவரை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.  இந்நிலையில் அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந் திற்காக நின்று கொண்டிருந்த பயணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச்சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் செல்போனை பறித்துக்கொண்டு செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தடுமாறி கீழே விழுவதும், அதில் ஒருவர் எழுந்து ஓட்டம் பிடித்ததும், மற்றொருவர் வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியதும் பதிவாகியுள்ளது.  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கடை வீதி கூட்ட நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி மற்றும் திருட்டு  சம்பவங்கள் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் கவன முடன் இருக்க போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்

உதகை, அக். 21 - காட்டெருமை தாக்கி உயிருக்கு போராடிய நிலை யில் இருந்தவரை 108  ஆம்புலன்ஸ் மூலம் அரசு  மருத்துவ மனை சேர்க்கப் பட்டு  தீவிர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், குன் னூர் கிளெண்டேல் எஸ் டேட் பகுதியைச் சேர்ந்தவர்  ராஜசேகர். தேயிலைத் தோட்டத் தொழிலாளியான இவர் வெள்ளியன்று காலை  பணிக்கு செல்லும் பொழுது  அங்கு இருந்த காட்டெ ருமை இவரை தாக்கியது. இதனால் படுகாயமடைந்த ராஜசேகரை அருகில்  இருந்த தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம்  குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று  சேர்த்தனர் அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்துக  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தருமபுரி, அக். 21- காவிரி உபரிநீரை ஏரிகளில் நீர் நிரப்பும்   திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டக்குழுவின் சார்பில்  மாவட்டச் செயலாளர் ஏ.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந் தாண்டு மழையால் காவிரியில் பல நாட்கள்  தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  இத னால் 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர்  கடலில் கலந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு  காவிரி உபரி நீரை மாவட்டம் முழு வதும் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த தமிழக அரசு  முன்வர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் போதுமான பருவ மழை பெய்துள்ள நிலையில், விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும்  அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில்  தாராள பயிர்க்கடன் வழங்க  வேண்டும். தீவனம் உள்ளிட்ட பொருட் களின் விலை அதிகரித்து வருவதால் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51, பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 42 வழங்க வேண்டும்.  பென்னாகரம் வட்டம்,  அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பங்கள் நூறு ஆண்டுகளாக விவசாயம் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களை நிலத்திலிருந்து வெளியேற்ற வனத்துறையினர் முயன்று வருகின்றனர். இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், காலம் காலமாக விவ சாயம் செய்து வரும் நிலத்திற்கு பட்டா  வழங்க மாவட்ட நிர்வாக முன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி: 2 பேர் கைது

கோவை, அக்.21- ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக கராத்தே மாஸ் டரிடம் ரூ.21.20 லட்சம் மோசடி செய்த 2 பேர்  மீது வழக்குப்பதிவு  செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், போத்தனூர் சாரதாமில் சாலையைச்  சேர்ந்தவர் சவுகத் (54). கராத்தே மாஸ்டரான இவர் தனது வீட்டு ஆவணங்களை அடமானம் வைத்து ரூ.3 கோடி கடன்  பெற்று சொந்தமாக தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார்.  அப்போது, அவருக்கு தென்காசியை சேர்ந்த நாகூர் மீரான்  (57) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதையடுத்து 5  சதவிகிதம் கமிசனுக்கு வங்கியில் கடன் வாங்கி தருவ தாக நாகூர் மீரான் தெரிவித்தார். மேலும், சட்ட ஆலோசனை  உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு கட்டங் களாக ரூ.21.20 லட்சத்தை நாகூர் மீரான், சவுகத்திடம் பெற்ற தாக தெரிகிறது. ஆனால், அதன் பின்னரும், ரூ.3 கோடி கடன் தொகை பெற்று தருவதற்கான ஏற்பாடுகளை நாகூர் மீரான் செய்யாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சவுகத்,  தென்காசி சென்று நாகூர் மீரானிடம் கடன் தொகை பெற்று  தருமாறும், இல்லையென்றால் தன்னிடம் வாங்கிய பணத்தை  திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், நாகூர் மீரான் உரிய பதில் அளிக்காமல் காலம்  தாழ்த்தி வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சவுகத் போத்த னூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய  இருபிரிவுகளின் கீழ் நாகூர் மீரான் மற்றும் அவரது கூட்டாளி  ஜான் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2,800 கிலோ ரேசன் அரிசி கடத்தல்

உதகை, அக்.21- கோத்தகிரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறி முதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்த கிரி வழியாக சரக்கு வாக னம் ஒன்றில் ரேசன் அரி சியை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்லப்படுவதாக அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குஞ்சப்பனை சோதனைச்சாவடி பகுதி யில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப் போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்த னர். அதில், 56 சாக்கு மூட்டை களில் மொத்தம் 2 ஆயிரத்து 800 கிலோ ரேசன் அரிசி  இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து அந்த ரேசன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாக னத்தை பறிமுதல் செய்த  போலீசார், கடத்தலில் ஈடு பட்ட பவானிசாகர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (39)  என்பவரை கைது செய்த னர்.

டிடிபி, ஜிடிஎன் மில்களில் போனஸ் உடன்பாடு

திருப்பூர், அக். 21 – திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் (டிடிபி) மில் தொழிலாளர்க ளுக்கு 15 சதவிகித போனஸ் வழங்குவதென உடன்பாடு ஏற்பட் டது.  டிடிபி மில் தொழிலாளர் போனஸ் குறித்து மில் நிர்வாகத்து டன், தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சிஐடியு பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, எச்எம்எஸ் செயலாளர் ராஜாமணி, எல்பிஎப் செயலாளர் கே.ராமதாஸ், ஏடிபி நிர்வாகி தேவராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு 15 சதவிகித போனஸ் தருவதென உடன்பாடு காணப்பட்டது. ஜிடிஎன் எண்டர்பிரைசஸ் அதேபோல் உடுமலை ஜிடிஎன் எண்டர்பிரைஸ் மில்லில்  வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 9.5 சதவிகிதம் போனஸ் வழங்குவதென ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த மில்  போனஸ் பேச்சுவார்த்தையில் சிஐடியு பொதுச் செயலாளர்  சி.ஈஸ்வரமூர்த்தி, ஐஎன்டியுசி செயலாளர் சீனிவாசன் ஆகி யோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், அக். 21 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உடுமலைபேட்டை கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அறிவியல் இயக்கக்  கிளைக் கூட்டம் உடுமலை, வக்கீல் நாகராசன் வீதியில் உள்ள  அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கௌரிசங்கர்   கலந்து கொண்டு மாவட்ட செயல்பாடுகளை விளக்கி கூறி னார். மாநில செயற்குழு உறுப்பினர் வி.ராமமூர்த்தி, மாவட்ட  பொருளாளர் வே.கார்த்திக் ஆகியோர் கூட்டத்தில் கலந்து  கொண்டனர். இக்கூட்டத்தில் உடுமலை கிளை நிர்வாகிகளாக தேர்ந்தெ டுக்கப்பட்டனர். கிளைத் தலைவர் எஸ்.செல்லத்துரை, செய லாளர் ஆசிரியர் ஈஸ்வரசாமி, பொருளாளர் மணி, துணைத்  தலைவர் ஆசிரியர் சுஜாதா, பி.வெங்கடேசன், இணைச் செய லாளர் ஆ.மோகனப்பிரியா, ஆர்.அனிதா ஆகியோர் தேர்வா னார்கள். இக்கூட்டத்தில் நவம்பர் மாத இறுதியில் துளிர் வினாடி  வினா நிகழ்வை நடத்துவது, உடுமலை கிளையில் துளிர் இல் லங்களை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை

திருப்பூர், அக். 21 - திருப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும்  தொடர்ந்து மழை பெய்து விடிய, விடிய கொட்டித் தீர்த் தது. திருப்பூர் வடக்கு தாலுகாவில் 50 மில்லி மீட்டர் மழை பெய் தது. இதேபோல் அவிநாசியில் 64 மி.மீ., பல்லடத்தில் 42 மி.மீ.,  ஊத்துக்குளியில் 27 மி.மீ., காங்கேயத்தில் 45 மி.மீ., தாராபுரத் தில் 27 மி.மீ., மூலனூரில் 39 மி.மீ., குண்டடத்தில் 14 மி.மீ., திரு மூர்த்தி அணை பகுதியில் 8 மி.மீ., அமராவதி அணை  பகுதியில் 23 மி.மீ., உடுமலையில் 50 மி.மீ., மடத்துக்குளத்தில்  12 மி.மீ., மாவட்ட ஆட்சியரகத்தில் 45 மி.மீ., வெள்ளகோவில்  ஆர்.ஐ. அலுவலகத்தில் மிக அதிகபட்சமாக 111 மி.மீ., மாவட்ட  ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் 62 மி.மீ., திருப்பூர் தெற்கில்  56 மி.மீ., என இம்மாவட்டத்தில் மொத்தம் 682 மில்லி மீட்டர்  மழை பெய்தது. இம்மாவட்ட சராசரி மழையளவு 40.12 மி.மீட்ட ராக பதிவாகி உள்ளது. அதேசமயம் அமராவதி அணியில் 81.04 அடி அளவுக்கும்,  திருமூர்த்தி அணையில் 54 அடி அளவுக்கும் தண்ணீர் தேங்கி யுள்ளது. உப்பாறு நீர்த்தேக்கத்தில் 0.62 அடி அளவுக்கும்,  நல்லதங்காள் அணையில் 11.91 அடியும், வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தில் 1.37 அடி அளவுக்கும் நீர் தேங்கியுள் ளது.

பருவமழையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

திருப்பூர், அக் 21 - வடகிழக்குப் பருவமழையின் போது பொதுமக்கள் கடைப்பிடிக்க  வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூா் மின் பகிர் மான வட்ட கூடுதல் தலைமைப் பொறி யாளா் ல.ஸ்டாலின்பாபு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பு: மின் பாதையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்லக்கூ டாது. மின் கம்பங்கள் பழுதடைந்திருந் தாலோ அல்லது மின் கம்பிகள் தொய் வாக இருப்பதைக் கண்டறிந்தாலோ உடனடியாக மின்வாரிய அலுவலகத் துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  மின் தடையை சரிசெய்யும் வகையில்  மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ மின்வாரிய பணியாளா் அல்லாத நபர் கள் ஏறக்கூடாது. மின் தடை ஏற்பட்டால்  அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத் துக்குத் தெரிவித்து மின் வாரிய பணியா ளா்கள் மூலமாகவே சரிசெய்ய வேண் டும். மழை காலங்களில் இடி, மின்னலின் போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது.  கால்நடைகளை மின் கம்பத்திலோ அல் லது எர்த் கம்பியிலோ கட்டக்கூடாது. வயல்களில் மின் வேலிகளை அமைக்கக்கூடாது. மின் சுவிட்சுகள், பிளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் பொருத்த வேண் டும். மின் கம்பத்தின் மீது கொடி கயிறு  கட்டி துணிகளை காயவைக்கும் செயலைத் தவிா்க்க வேண்டும். குளிய லறை, கழிவறை மற்றும் ஈரமான இடங்க ளில் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு  அருகில் உள்ள மரங்களை வெட்டுவ தற்கு மின்சார வாரியத்தின் அலுவ லா்களை அணுக வேண்டும். மின்சாரத் தினால் ஏற்படும் தீயை தண்ணீா் கொண்டு அணைக்க முயற்சிக்கக்கூ டாது. இடி, மின்னலின்போது தொலைக் காட்சி பெட்டி, மிக்ஸி,கிரைண்டா்,  கணினி, தொலைபேசி, கைபேசி ஆகிய வற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்ப துடன், இரும்பு ஜன்னல், இரும்புக் கத வுகளைக் தொடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர், அக். 21 -  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில்  அக். 22 சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது.  திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் சா.பிரபாகரன் கூறி யதாவது: திருப்பூர் மாநகரில் முக்கிய சந்திப்புகள் மற்றும்  முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும்  கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது. காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப் பட்டு, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.  சாலையோர கடைகள் அனைத்தும், மக்கள் நடமாட்டத்துக்கு  ஏற்ப சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துடன் இணைந்து  தீபாவளி பண்டிகைக்கு தேவையான சிறப்பு பேருந்துகள் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நெரிசலை  குறைப்பதற்காக தற்காலிக பேருந்து நிலையஙகள் அமைக் கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் தங்க ளது சரக்கு பொருட்களை காலை 6 மணி முதல் 8 மணி  வரையிலும், மாலை 8 மணி முதல் 10 மணி வரை இறக்கிக்  கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஈரோடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை

ஈரோடு, அக்.21- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் கன மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி காலை 8  மணி நிலவரப்படி 638.8 மிமி மழை பெய்துள் ளது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 37.57 ஆக பதிவாகியுள்ளது. பெரும்பள்ளம் அணை மற்றும் வறட்டுப்பள்ளம் அணை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நீர்நிலை களும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன. பவானி சாகர் அணையிலிருந்து 3700 கன அடியும், காவிரியில் 105000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதி களிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு ரங்கம்பாலையம், அன்னை சத்யா நகர், முத் தம் பாளையம், மூலப்பாலையம், சேனாதி பதி பாளையம், செட்டிப்பாலையம் உள் ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 1000க்கும்  மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. வீடுகளில் புகுந்த மழை நீர் காரணமாக வீடு களில் உள்ள பொருட்களும் சேதமாகி உள் ளன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கபட்டு உள்ளது. இதே போல அப்பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து உள்ளதால் தீபாவளிக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்களும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை நீர் பாதிக்கப் பட்ட பகுதிகளில் வருவாய் துறையினர் மற் றும் தீயணைப்பு துறையினர் மீட்டு தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டு உள்ளனர்.

வலிப்பு ஏற்பட்டு குளத்தில் தவறி விழுந்து பலி

கோவை, அக். 21- வலிப்பு ஏற்பட்டு உக்கடம் குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், கல்லாமேடு, தெற்கு ஹவுசிங்  யூனிட்டை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (30). கூலி தொழிலா ளியான இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அரவிந்த்குமார் தனது பாட்டி வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் உக்கடம் குளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வித மாக அவருக்கு திடீரென வலிப்பு வந்து குளத்தில் தவறி விழுந்தார். இதனைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வியாழனன்று பரிதாபமாக உயிரிழந் தார். இதுகுறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

திருடுபோன செல்போன்கள் ஒப்படைப்பு

சேலம், அக்.21- சேலத்தில் திருடுபோன 101 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதனை உரிமையாளர்களிடம் மாநகர காவல் ஆணையா ளர் நஜ்முல் ஹோடா ஒப்படைத்தார். சேலம் மாநகரில் பலரது செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகாரளித்தனர். அதன்பேரில் மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் திருட்டு மற்றும் மாய மான செல்போன்கள் எங்கு உள்ளது என்பது குறித்து செல் போன் டவர் மூலமாக விசாரணை நடத்தினர். இவ்வாறு கடந்த சில மாதங்களில் திருட்டு, மாயமான 101 செல்போன்கள் மீட்கப் பட்டுள்ளது. சேலம் டவுன் போலீஸ் சரகத்தில் 27 செல்போன் களும், கொண்டலாம்பட்டி சரகத்தில் 60 செல்போன்களும் உட் பட 101 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு  ரூ.15 லட்சத்து 65 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பல் வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா வழங்கினார். அப்போது, துணை ஆணையளாளர்கள் லாவண்யா, மாடசாமி, உதவி ஆணையாளர்கள் அசோகன், கந்தசாமி, ஆனந்தி மற்றும் ஆய்வாளர்கள் சந்தோஷ்குமார், சந்திர லேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கத்திமுனையில் செல்போன் பறிப்பு

கோவை, அக்.21- கோவை சாய்பாபா காலனி பகுதியில் கத்தி முனையில் மிரட்டி 3 பேரிடம் செல்போன்கள் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் பொன்னரசன் (31). இவர் கோவை சாய்பாபா காலனி பகுதி யில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து  வருகிறார். இவர் வியாழனன்று சாய்பாபா காலனி - மேட்டுப் பாளையம் சாலையில் தனது நண்பர்களான கயல்நாத், விஜய் ஆகியோருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், அவர் களிடம் செல்போன்களை தருமாறு மிரட்டினர். ஆனால், செல்போன்களை அவர்கள் கொடுக்க மறுத்து வாக்கு வாதம் செய்ததால், ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் சேர்ந்து  கத்திமுனையில் மிரட்டி பொன்னரசன் உட்பட 3 பேரிட மிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 3 செல்போன்களை பறித்துவிட்டு தப்பினர்.  இதுகுறித்து பொன்னரசன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன் பேரில் விசாரணை மேற் கொண்ட வந்த நிலையில், செல்போன்கள் பறிப்பில் ஈடு பட்டது சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலையைச் சேர்ந்த  வன்னியராஜ் (எ) வன்னீஷ்(33) மற்றும் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சபரி (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வன்னியராஜ் மீது மட்டும் வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளதும், ஏற்கனவே அவர் குண்டர் சட்டத்தில் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் காப்பக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஈரோடு, அக்.21- காப்பகத்தில் பெண் குழந்தைக ளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த காப்பக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பகுதியில் தனியார் ஆதர வற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியுள்ள குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் ஈரோடு மூலப்பாளையம், விவேகானந்தர் வீதியைச் சோ்ந்த பசு பதி (59) என்பவர் இரவுக் காவலராக வும், ஓட்டுநராகவும் பணியாற்றி வந் தார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம் பர் 19 ஆம் தேதி பள்ளி முடிந்து காப்ப கத்துக்கு வந்த 12 வயது சிறுமியை பசு பதி பாலியல் வன்கொடுமை செய்துள் ளார். பின்னர் சிறுமியிடம் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவ தாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி மற்றொரு சிறுமிக்கும் பாலியல் தொந்த ரவு கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த காப்பகத்தில் பணி யாற்றும் பெண் ஊழியர், பாதிக்கப்பட்ட சிறுமிகளுடன் கடந்த 2019ஆம் ஆண்டு  டிசம்பர் 3ஆம் தேதி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறை யினர் போக்சோ, கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மக ளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மாலதி முன்னிலையில் நடந்தது. விசா ரணை முடிந்த நிலையில் வியாழனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இரண்டாவது சிறுமியை பாலியல் தொந் தரவு செய்த குற்றத்திற்கு 5 ஆண்டு  சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக் கப்பட்டது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராத மும், அபராதத் தொகையை செலுத்த  தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத்  தண்டனையும் விதித்து உத்தரவிடப் பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி அவர் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனு பவிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட முதல் சிறு மிக்கு ரூ.5 லட்சமும், இரண்டாவது சிறு மிக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.6 லட் சத்தை நிவாரண தொகையை ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு வழங் கிட வேண்டும் என நீதிபதி மாலதி பரிந் துரைத்தார். இதனையடுத்து பசுபதியை காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கனமழையால் சாலைகள் சேதம்

நாமக்கல், அக்.21-  திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பகுதியில்  உள்ள சாலைகள் தொடர் மழை காரணமாக சேதம் அடைந்துள்ளது.  மழை பாதித்த பகுதி களை திருசெங்கோடு சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மேற்கொண்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம், நீர்  வழித்தடத்திற்காக இது வரை என்ன மாற்று நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என வட்டார வளர்ச்சி அலு வலக அதிகாரிகளிடம் விசா ரித்தார். பின்னர், ஒரு வார காலமாக பணிகள் நடை பெறாமல் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.




 

;