districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பசுந்தேயிலை விலை ரூ.16.22 ஆக நிர்ணயம்

உதகை, ஜூன் 7- நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக ஒரு கிலோ ரூ.16.22 ஆக நிர்ணயம் செய்து தேயிலை வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு,  சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்ற னர். தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை தனியார்  தேயிலைத் தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத்  தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற் கான விலை நிர்ணயத்தை தேயிலை வாரியம் மாதந்தோறும்  வெளியிடும். அதன்படி, தேயிலை தொழிற்சாலைகள் மே  மாதம் கொள்முதல் செய்த பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.16.22 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின், ஏல விற்பனையின் அடிப்படையில் ஜூன் மாதம் விவசாயிகளுக்கு உரிய முறையில் விலை வழங்க வேண்டும் என தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

ஈரோடு, ஜூன் 7- ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ- களில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2 அரசு மற்றும் 11 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் சேர விரும்பும் மாணவ, மாணவியர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.