திருப்பூர், அக்.13- திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூ ராட்சியில் இருந்து சென்னிமலை செல்லும் ரயில்வே நுழைவுப் பாலம் பகுதியில் மழை நீர் பிரச்சனைக்கு தீர்வு காண அமைச்சர் முன் னிலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தி பேசினர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு அமைச்சர் அறிவு றுத்தினார். ஊத்துக்குளி காமாட்சியம்மன் மண்ட பத்தில் வியாழனன்று, மாநில செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் பங் கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஊத் துக்குளி பேரூராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை குறித்தும், புதிய வீட்டு குடிநீர் இணைப்பு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏழாவது வார்டு உறுப்பினர் கு.சரஸ்வதி கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும்,முன்னாள் பேரூ ராட்சி தலைவருமான ஆர்.குமார் சென்னி மலை நுழைவு பாலம், மழைநீர் பிரச்சனை குறித்து விளக்கிப் பேசினார். பேரூராட்சி யில் எடுக்கப்பட்டுள்ள வடிகால் பணியை விரைந்து முடிக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பதில் அளித்து பேசிய, அமைச்சர் சாமிநாதன், மாவட்ட ஆட்சியர் வினீத் இருவரும், உடனே பாலம் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படுத்த ஊத்துக்குளி செயல் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியா ளர் ஆகியோருக்கு உரிய ஆலோசனை களை வழங்கி விரைந்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தினர்.