districts

வால்பாறையில் யானை குட்டி உயிரிழப்பு

வால்பாறையில் யானை குட்டி உயிரிழப்பு வால்பாறை, டிச.9- வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சுற்றி வந்த யானை குட்டி ஒன்று உயிரிழந்தது தொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிக ரித்து காணப்படுகிறது. இந்த யானைகள் அங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களை சுற்றி  வருகின்றன. அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக் குள்ளும் நுழைந்து வீடுகள் மற்றும் பொருட்களை சேதப் படுத்தி வருகிறது. இந்நிலையில் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு குட்டி யானை முடீஸ் எஸ்டேட்டை அடுத்த முத்து முடி எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தேயிலை செடிகளுக்கு மத்தியில் குட்டி யானை மயங்கி கிடப் பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடன டியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதை யடுத்து மானாம்பள்ளி வனசரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது குட்டி யானை மயங்கி கிடந்தது. இதைதொடர்ந்து உடனடியாக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு குட்டியானைக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குட்டி யானை வியாழனன்று காலை உயிரிழந்தது. இந்த குட்டி  யானையின் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;