கோவை, மார்ச் 21- கேங்மேன் பணி நியமனத்தை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, சிஐடி மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கேங் மேன் பணி நியமனம் உடனே வழங்கிட வேண்டும். அடிப்படை ஊதியத்தை இந்த மாதத்தில் இருந்து உடனே வழங்கிட வேண்டும். கேங்மேன் ஊர் மாறுதல் உத் தரவை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. டாடாபாத் மின்வாரிய தலைமை பணி மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாநகர செயலாளர் டி.மணிகண்டன் தலைமை ஏற்றார். இதில், பொருளாளர் ஏ. சாதிக்பாட்சா, மையத்தலைவர் ஆர்.காளி முத்து மற்றும் கேங்மேன் எஸ்.யுவராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் குறித்து மாநகர தலைவர் வி.மதுசூதனன் சிறப்புரையாற்றினார். எஸ். குணசீலன் நன்றி கூறினார். குனியமுத்தூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கோவை தெற்கு கிளை செய லாளர் என்.ரத்தினகுமார் தலைமை ஏற்றார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று கண்டன உரை யாற்றினார். இதில் திரளானோர் பங்கேற் றனர். முடிவில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.பழனிச்சாமி நன்றி கூறினார்.