தாராபுரம், பிப்.22- தாராபுரம் நகராட்சி தேர்தலில் 3 மற்றும் 16 ஆவது வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கு பிப்.19 அன்று தேர்தல் நடைபெற்றது. தாராபுரம் நகராட்சி 30 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தாராபுரம் உடு மலை ரோடு பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது. இதில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 3 ஆவது வார்டில் போட்டி யிட்ட மு.அன்பழகன், 686 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதேபோல், 16 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெ.கமலக்கண்ணன் 656 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.