districts

img

கூலித் தொழிலாளி மகளின் படிப்பு செலவுக்கு முதல்வர் நிவாரண நிதியில் ரூ.52 ஆயிரம் வழங்கல்

தாராபுரம், செப். 25 - தாராபுரம் கூலித் தொழிலாளி மகளின் படிப்பு செலவுக்காக முதல் அமைச்சர் நிவா ரண நிதியில் இருந்து ஆதிதிராவிட நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரூ.52  ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி னார். தாராபுரம் 27 ஆவது வார்டு காட்டுநா யக்கன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். கூலித் தொழிலாளி. இவரது மகள் பாரதி  (20) கோவையில் உள்ள தனியார் கல்லூரி யில் பி.எஸ்.சி இறுதியான்டு படித்து வருகி றார். இந்நிலையில் இவருக்கு மூன்றாம்  ஆண்டு படிக்க போதிய நிதி வசதி இல்லாத தால் அவருடைய பெற்றோர் பெரும் சிரமப் பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம்  தமிழக முதல்வருக்கு செந்தில் தனது மகள்  படிப்பு செலவுக்காக பணம் கேட்டு மனு அனுப்பி இருந்தார். அதனைப் பார்த்த தமிழக  முதல் அமைச்சர் கல்லூரி மாணவி பாரதியின்  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதல மைச்சர் நிவாரண நிதியில் இருந்து அந்த  பெண்ணுக்கு நிதி வழங்க ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜூக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அமைச்சர் அந்த மாணவியையும், பெற்றோ ரையும் அழைத்து படிப்பு செலவுக்காக ரூ. 52  ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி னார்.  அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதா வது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூலி தொழிலாளிகளின் பிள்ளைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என் பதற்காக கல்லூரி மாணவியின் படிப்பு செல வுக்காக இது வழங்கப்பட்டுள்ளது. இதனை  முறையாக கல்லூரிக்கு செலுத்தி கல்லூரி  படிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என அந்த மாணவிக்கு அறிவுரை கூறி அனுப் பினார்.  அப்போது திமுக மாவட்ட பிரதிநிதியும்,  முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான அய்யப் பன் உடன் இருந்தார்.