districts

img

பள்ளிகளில் கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு

மே. பாளையம், மே 17- மேட்டுப்பாளையம் பள்ளிகளில் கல்வித் துறை இயக்குனர் திடீர் ஆய்வு மேற் கொண்டு, கட்டிடப்பணி, மாணவர் சேர்க்கை,  தேர்வுக்கான மையம் ஆகியவற்றை பார் வையிட்டார்  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில்  உள்ள பள்ளிகளில் வெள்ளியன்று தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண் ணப்பன் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் த. ராஜேந்திரன் ஆகியோர் கல்வி  சார்ந்த பல்வேறு பணிகளை ஆய்வு செய்த னர்.  அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளை யம் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மேல்நிலை வகுப்புக்கான  மாணவர் சேர்க்கையை முனைவர் எஸ்.கண்ணப்பன் துவக்கி வைத்தார். அத்துடன், மாணவிக ளுக்கு அரசுப் பள்ளிகளுக்குரிய 7.5 சத விகித  இட ஒதுக்கீடு பற்றி எடுத்துரைத்தார்.  மேலும், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றதற்கும், தொடர்ந்து ஆறாண்டுகளாக 100% தேர்ச்சி அடைந்து வருவதை பாராட் டியும் தலைமையாசிரியை ஜி.இந்தி ராவுக்கு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், சக ஆசிரியர்களையும் பாராட்டினார். தொடர்ந்து, பள்ளியில் நடை பெறும் கட்டுமானப் பணிகள், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான விண்ணப் பிக்கும் மையத்தின் செயல்பாடு ஆகி யவற்றை ஆய்வு செய்தார். மாணவிகள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தாலும் துவண்டு விடக்கூடாது எனவும், சிறப்பு வகுப்பில் பயின்று தேர்ச்சி  அடையவும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரி யர் கழகத் தலைவர் எஸ்.பாஷா, உதவித்  தலைமையாசிரியர்கள் எம்.லீலா மகேஸ் வரி, எஸ். ஆனந்தகுமார், உள்ளிட்ட ஆசி ரியர்கள் உடனிருந்தனர்.