districts

img

கோவை: பழைய சிதிலமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிப்பு

கோவை, டிச.23-  கோவை மாநகராட்சியில்  உள்ள பழைய  சிதிலமடைந்த ஆபத்தான வகையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.  நெல்லையில் தனியார் பள்ளி சுவர்  இடிந்து விழுந்த விபத்தில் மூன்று மாண வர்கள் பலியாகினர். இதனையடுத்து மாநி லம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து தரமற்ற கட்டிடங்கள் இடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. இதனையடுத்து கோவை  மாவட்டத்தில் உள்ள தரமற்ற பள்ளி கட்டி டங்களை ஆய்வு செய்யும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.  இதன் தொடர்சியாக கோவை மாவட் டம் முழுவதும் சிதிலமடைந்த ஆபத்தான வகையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை பெரியகடை வீதி, காளப்பட்டி, கணபதி, ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆபத்தான வகையில் உள்ள கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

;