தருமபுரி, டிச.1- இருளப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்திரா நகர் அரசு தொகுப்பு வீடுகளை உடனடியாக சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என இருளர் இன மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி ஒன்றியத்திற்க்குட்பட்ட இருளப்பட்டி ஊராட்சியில் இரு ளப்பட்டி, நாகலூர் காமராஜர் நகர், இந்திரா நகர் , பீரங்கி நகர் என ஐந்து கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஐந்தாயிரத் திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இதில் இந்தி ராநகரில் 500க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களுக்கு வீட்டுமனையோ, விவ சாய நிலமோ இல்லை. கூலி வேலையை நம்பி மட்டுமே பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண் டுகளுக்கு முன்பு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் மழைநீரில் ஊறி யதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடு கள் இடிந்து விழும் நிலையில் உள் ளது.
இதனால் எந்நேரமும் உயிர் பயத்தில் இந்த மக்கள் மழைக் காலத்தில்படுக்க முடியா மல் தவித்து வருகின்றனர். ஆகவே, இந்த வீடுகளை புதுப்பித்தும், இடிந்து விழுந்த வீடு களுக்கு புதிய வீடுகளும் கட்டிக் கொடுக்கக்கோரியும் கடந்த பத்து ஆண்டுகளாக சம்மந்தப்பட்ட அதி காரிகளிடம் மனுகொடுத்தும் சீர மைக்க எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்ப தால் அருகில் வயல் வெளிகள், குட் டைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால் வீடுகள் முழு வதும் தண்ணீர் தேங்கி மக்கள் குடியி ருக்க இயலாத ஒரு நிலையில் உள்ள னர். ஆகவே, அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இம்மக்க ளுக்கு பழுதடைந்து வீடுகளை சீர மைக்க வேண்டும்.வீடு இல்லாத வர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும். பழுதடைந்த வீடு கள் இடிந்து பெரும் பாதிப்பு ஏற்படுத் துவதற்கு முன் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் இன மக் கள் வலியுறுத்தியுள்ளனர்.