திருப்பூர், அக். 7 - திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடித் தலை வர்களில் ஒருவரான தோழர் கே.எஸ்.கருப்ப சாமியின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் உணர்ச்சி கரமாக கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சி யின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், சிஐடியு பாத்திர தொழிலா ளர் சங்கத் தலைவர் அ.ஆறுமுகம், செய லாளர் கே.குப்புசாமி, பொருளாளர் என்.குபேந்திரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டு கே.எஸ்.கே.வை நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற தோழர் கே.எஸ்.கருப்பசாமி நினைவஞ்சலி நிகழ்ச் சியில் சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் கே.எஸ். கருப்பசாமியின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் வை.ஆனந்தன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வ ரன், என்.கோபாலகிருஷ்ணன் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருமுருகன் பூண்டி அம்மா பாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வ ரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடாசலம், நகராட்சி கவுன்சிலர் சுப்பிர மணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பால சுப்பிரமணியம், மோகனசுந்தரம் உள்பட திர ளானோர் கலந்து கொண்டு கே.எஸ்.கருப்ப சாமியை நினைவு கூர்ந்து மலரஞ்சலி செலுத் தினர். திருப்பூர்,தென்னம்பாளையம் அக்கேரி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் கே.எஸ்.கருப்பசாமி உருவப்படம் வைக்கப் பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.