ஈரோடு, செப்.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.பாலசுப்பிரமணியம்-மின் முதலாம் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் ஈரோடு, ஆப்பக்கூடலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி தாலுகா குழு உறுப்பினரும், “தீக்கதிர்” நாளிதழின் தீவிர வாசகர், சிறந்த பேச்சாளர் என பன்முக தன்மை கொண்ட பாலுக்குட்டி (எ) டைலர் ஏ.கே.பாலசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் கே.துரைராஜ் செங்கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், தளிர்கொடி, அந்தியூர் இடைக்கமிட்டி செயலாளர் ஆர்.முருகேசன், மூத்த தோழர் ஏ.கே.பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக நிகழ்வில் கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.