districts

கணவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

உதகை, மே 16- விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று தனது கணவரை கொடூரமாக தாக் கிய காவல் ஆய்வாளர் மற்றும் காவ லர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி உதகை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் பெண் புகாரளித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை, காந்தல் பகு தியை அடுத்துள்ள, குமாரசாமி தெருவைச் சேர்ந்த ஜபினா என்பவர், வியாழனன்று தனது  குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப் பாளரை சந்தித்து புகார் ஒன்றை அளித் தார்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது, எனது  கணவர் பாரூக் பல ஆண்டுகளாக உதகை  படகு இல்லம் பகுதியில் குதிரை சவாரி தொழில் செய்து வருகிறார். கடந்த மே 12  ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணி ஒருவர்  குதிரையில் சவாரி சென்றபோது, தானே  குதிரை ஓட்டி கொள்வதாக கூறி சென்றுள் ளார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த  சுற்றுலாப் பயணி தவறி விழுந்து விட்டார்.  பின்பு தவறி விழுந்தவரை பாரூக் உடனடி யாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று  முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைத் துள்ளார். தவறி விழுந்து காயமடைந்த சுற்று லாப் பயணி புகார் எதுவும் அளிக்காத நிலை யில், அன்றைய தினம் மதியம் ஜி1 காவல்  ஆய்வாளர் மீனா பிரியா, அவரது ஜீப் ஓட்டுநர்  வேலு ஆகியோர் படகு இல்லம் பகுதிக்கு வந்து, எனது கணவரை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.  இனிமேல் குதிரை சவாரி தொழில் செய் வாயா? என்று கேட்டு சுமார் அரை மணி நேரத் திற்கும் மேலாக அடித்ததில் எனது கணவ ரின் பின்புறத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்ட துடன், நடக்க முடியாமலும், இயற்கை உபா தைகளை கழிக்க முடியாமல் கடும் அவதிப் பட்டுள்ளார். அன்றைய தினம் நள்ளிரவில் வீட் டிற்கு வந்த அவர் இதுகுறித்து என்னிடம் ஏதும்  தெரிவிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரால்  நடக்க முடியாமல் துடித்த நிலையில் நான் என்ற நடந்தது என்று கேட்ட போது, நடந்த வற்றை கூறினார். மேலும், இவை அனைத் தும் ஆய்வாளர் முன்னிலையில் நடந்துள் ளது. அடித்து முடித்த பின்னர் ரூ.5 ஆயிரம்  பணம் கொடுத்தால் உன் மீது வழக்குப்பதிவு செய்ய மாட்டோம்; விட்டு விடுவதாக தெரிவித்துள்ளனர். தற்போது கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எனது கணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான் மற்றும் எனது 4 குழந்தைகளுக்கு ஒரே ஆதரவு எனது கணவர் தான். எவ்வித  காரணமுமின்றி எனது கணவரின் தாக்குத லுக்கு காரணமான ஆய்வாளர் மீனாபிரியா, தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;