districts

img

தோழர் கே.கூடுமியான் நினைவேந்தல்; படத்திறப்பு

தருமபுரி, மே 16- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.கூடு மியான் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.கூடு மியான் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தருமபுரி முத்து  நினைவு அறக்கட்டளை இல்லத்தில் நடைபெற்றது. இந்நி கழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் வி.மாதன் தலைமை  வகித்தார். பி.நாகராஜ ரெட்டி, டி.எஸ்.பாண்டியன், ஒய்.திம்மா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜி. வெங்கட்ராமன் வரவேற்றார். சிபிஎம் மூத்த தலைவர் பி. இளம்பரிதி, தோழர் கே.கூடுமியான் உருவப்படத்தை திறந்து  வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். அப் போது, முத்து நினைவு அறக்கட்டளை சார்பில், அவரது குடும் பத்தாரிடம் ஒரு லட்சம் ரூபாய் குடும்ப நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரும புரி மாவட்டச் செயலாளர் அ.குமார், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.சிசுபாலன், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப் பினர் சி.பிரகாஷ், முத்து நினைவு அறக்கட்டளை நிர்வாகி கள் சோலை.அருச்சுனன், வே.விசுவநாதன், இ.பி.பெரு மாள், பி.ராமன், எஸ்.தீர்த்தகிரி, எம்.மீனாட்சி உட்பட பலர்  கலந்து கொண்டனர். முடிவில், என்.கந்தசாமி நன்றி கூறினார்.