செல்போன் பறித்த வாலிபர் கைது
கோவை, அக்.10- கோவை அருகே செல் போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை, சிங்காநல்லூர் ஜெயா நகரைச் சேர்ந்தவர் பரணிதரன் (19). இவர் சனி யன்று கிருஷ்ணா கார்டன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது, அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பரணிதரனின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து, நீலி கோனாம்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த குமார் என்பவரை கைது செய்த னர்.
டேங்கர் லாரி வெடித்து தொழிலாளி பலி
நாமக்கல், அக்.10- நாமக்கல் பட்டறையில் டேங்கர் லாரி வெடித்து தொழி லாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் அருகே முதலைப்பட்டிபுதூர் பொன்நகரில் பெரி யசாமி (38) என்பவர் டேங்கர் வெல்டிங் பட்டறை வைத் துள்ளார். இங்கு பாடி கட்ட 10க்கும் மேற்பட்ட லாரிகள் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சனியன்று மாலை, பழுதான ஒரு டேங்கர் லாரிக்கு பெரியசாமி வெல்டிங் வைத்து கொண்டிருந்தார். அப்போது, டேங்கர் திடீரென வெடித்து சிதறியது. இதில், வெல்டிங் வைத்து கொண்டிருந்த பெரிய சாமி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், டேங்கர் லாரி வெடித்ததில், அருகில் இருந்த ஒரு லாரியும் சேதமடைந்தது. பலத்த சத்தத்துடன் டேங்கர் வெடித்து சிதறி யதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீ பரவாமல் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பழுதான டேங்கர் லாரியின் உரிமை யாளரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ்எஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
உதகை, அக்.10- ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) மூலம் 3261 காலிப் பணி யிடங்களுக்கு (271 பிரிவு பணியிடங்கள்) அறிவிப்புகள் வெளி யாகியுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேற் காணும் கல்வித்தகுதி உள்ள மனுதாரர்கள் விண்ணப் பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. மேலும், மேற்காணும் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 20.10.2021 முதல் துவக்கப்பட உள்ளது. மேலும், விவரங்களுக்கு 0423-2223346 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை நீலகிரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்தி பயனடை யுமாறு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.