districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இடுவாயில் சாதியை சொல்லி திட்டிய  பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

திருப்பூர், டிச.18- திருப்பூர் அருகே பள்ளி மாணவர்களை சாதி பெயரை  சொல்லி திட்டிய தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம்  செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப் பித்தார். திருப்பூர் இடுவாய் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதுடன், சாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும் மாணவ, மாணவிகள் புகார் கூறியி ருந்தனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.  இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கூறியதுபோல் தலைமை  ஆசிரியர் கீதா நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.

மூன்று முறை நோட்டீஸ் கொடுத்தும் அலட்சியம்: 21 சாய ஆலைகள் மூடல்

திருப்பூர், டிச.18- திருப்பூரில் விதிமுறைகளை மீறிய 21 சாய ஆலை மற்றும் பொது சுத்திகரிப்பு நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு வாரி யம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக சாயக் கழிவு களை சுத்திகரித்து கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அலட்சி யமாக செயல்பட்டுள்ளனர். இந்த விதி மீறல் தொடர்பாக மூன்று முறை நோட்டீஸ் வழங்கியும், சுத்திகரிப்பு பணிகளை  முறையாக செய்ய தவறியதால் முதலிபாளையம் பொது  சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதில் உறுப்பினர்களாக உள்ள 21 சாய ஆலைகளுக்கு சீல் வைக்க திருப்பூர் மாவட்ட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இளம்பெண் மர்ம மரணம் - ஆர்டிஓ விசாரணை

இளம்பிள்ளை, டிச.18- இளம்பிள்ளை அருகே பெண் ஒருவர் மர்மமான முறை யில் உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர்  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த பெருமா கவுண்டம்பட்டி, மண்கரடு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (29). கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 2016 ஆம்  ஆண்டு நித்யா (வயயது 24) என்ற பெண்ணுடன் திருமணமா னது. இத்தம்பதியினருக்கு பிரணாவ் (5) என்ற ஒரு மகனும், நித்ரா (2) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து  வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்யா வியாழ னன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக  அவரது கணவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நித்யாவின் தாய் சசிகலா, எனது மகள் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது  எனக்கூறி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையி னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திரு மணமாகி 6 ஆண்டுகளே ஆன நிலையில், பெண் உயிரி ழந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

கோவை, டிச.18- திமுக அரசை கண்டித்து வெள்ளியன்று  கோவை தெற்கு  தாலுகா அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தற் போது அமலில் உள்ளதால் அதிக அளவில் கூட்டம் கூடுவது தவிர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறை களை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர் ஜுனன், கே.ஆர். ஜெயராமன், அருண்குமார், ஏ.கே. செல்வ ராஜ், அமுல் கந்தசாமி, முன்னாள் சபாநாயகர் தனபால், தாமோதரன், கந்தசாமி உட்பட அக்கட்சியின் முன்னணி நிர் வாகிகள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

ஸ்ரீ ஹெத்தையம்மன் திருவிழா டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

உதகை, டிச.18- ஸ்ரீ ஹெத்தையம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்திட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சிஐடியு நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கத்தின் மாவட்டச் பொதுச்செயலாளர் மகேஷ்,  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப் பதாவது, நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் திரு விழாவை கொண்டாடும் வகையில் எதிர்வரும் டிச.22 ஆம்  தேதியன்று (புதன்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திருவிழாவின்போது மது, மாமிசம் ஆகியவற்றை உள்ளூர் மக்கள் பயன்படுத்துவதில்லை. இத்தகைய சிறப்புவாய்ந்த திருவிழாவின்போது அர சுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானக் கடை களுக்கு விடுமுறை அளிக்கப்படாததை சுட்டிக்காட்டுகி றோம். எனவே, நீலகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு டிச.22 ஆம் தேதியன்று மாவட்டத்தில்  உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடு முறை அளிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;