சேலம், ஏப்.30- பாரகன் செப்பல் கம் பெனியில் சிஐடியு தொடங் கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கருமா புரத்தில் இயங்கி வரும் பாரகன் செப்பல் கம்பெனி யில் புதிதாக இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) துவக்கப்பட்டு, ஞாயிறன்று மே தின கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பரத் தலைமையில் வகித்தார். தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம் மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி செங்கொடியினை ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் வீ.இளங்கோ பெயர் பலகையினை திறந்து வைத்தார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், துணைச்செயலாளர் வி.ராம மூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல், சிஐடியு நிர்வாகி ஹரி கிருஷ்ணன் உட்பட ஏராளமான தொழி லாளர்கள் பங்கேற்றனர்.