districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர்கள் தர்ணா

தருமபுரி, பிப்.25- மின்வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பினர் செவ்வாயன்று தர் ணாவில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் 60  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. களப்பிரி வில் மட்டும் ஆரம்பகட்ட பதவிகள்  32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி யிடங்கள் உள்ளன. மின்தடை  நீக்கம் உள்ளிட்ட பணிகளை செய்ய போதிய பணியாளர் இல்லை. கூடுதல் பணிச்சுமையோடு பணியாற்றி வருவதால், மின்வா ரிய ஊழியர்கள் களப்பிரிவில் விபத்துக்குள்ளாகி மரணமடைவ தும், அங்கங்கள் ஊனமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.  தமிழகத்தில் படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு, அதே போல மின்வாரியத்தில் பல ஆண்டு களாக பணியாற்றும் ஒப்பந்த ஊழி யர்கள் என மின்வாரிய பணியை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஊழியர்கள் மத்தி யில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி யுள்ளது. எனவே காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். 2019 ஆம்  ஆண்டு டிச.1 ஆம் தேதி முதல் 2023  ஆம் ஆண்டு மே 16 வரை மின்வா ரிய பணியில் இணைந்தவர்க ளுக்கு 6 சதவிகிதம் ஊதிய உயர்வு  வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், பழைய ஓய்வூ திய திட்டத்தை நடைமுறைப்படுத்த  வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பி னர் செவ்வாயன்று தர்ணாவில் ஈடு பட்டனர். தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவிற்கு, அமைப்பின் மாநில துணைத்தலை வர் பி.ஜீவா தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், பொருளா ளர் ஆர்.திம்மராயன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  கோவை  இதேபோன்று கோவை மாவட் டம், டாடாபாத் மத்திய அலுவலகம்  முன்பு நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு, மாநகர் தலைவர் வி.மது சூதனன் தலைமை வகித்தார்.  மாநிலச் செயலாளர் டி.மணிகண் டன் சிறப்புரையாற்றினார். மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டச் செயலாளர் பி. விவேகானந்தன் வாழ்த்தி பேசி னார். மண்டலச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார். முடிவில் மாநகர்  இணைச்செயலாளர் கோகில வாணி நன்றி கூறினார். ஈரோடு  ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற தர்ணா விற்கு துணைத் தலைவர் எம்.ஆர். பெரியசாமி தலைமை வகித்தார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் எச். ஸ்ரீராம் தொடக்க உரையாற்றினார். திட்ட தலைவர் சி.ஜோதிமணி கோரிக்கைகளை விளக்கி பேசி னார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், கிளை பொருளாளர் ஏ.விஸ்வநாதன் நன்றி கூறினார். இதேபோல் கோபி  வேட்டைகாரன் கோவில் மின்  பகிர்மான மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு, கோபி மின்பகிர்மான வட்டகிளைத் தலை வர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, மாநில துணைச் செயலாளர் ஜோதி மணி ஆகியோர் மின் கோரிக்கை கள் குறித்து விளக்கவுரையாற்றி னார். இதில் திரளானோர் பங்கேற்ற னர்.