திருப்பூர், மே 30 - இந்திய தொழிற்சங்க மையம் சி ஐ டி யூ வின் 55 ஆம் ஆண்டு துவக்க விழா அமைப்பு தின நிகழ்ச்சி திருப்பூர், காங்கேயம், அவிநாசி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. திருப்பூர்: சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமை ஏற்றார். மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் சங்க கொடியை ஏற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ், மாநிலக்குழு உறுப்பினர் குமார், மாவட்டத் துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் சித்திர உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து, சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. காங்கேயம்: காங்கேயம் அரசு பேருந்து பணிமனை சிஐடியு கிளையில் வியாழனன்று செங்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண் டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு சங்க கிளைத் தலைவர் கே.விஸ்வ நாதன் தலைமை ஏற்றார். மண்டல துணைத் தலைவர் ஆர்.வின் சென்ட் செங்கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.காளிராஜ், பொதுக்குழு உறுப்பினர் டி.ராஜ சேகர், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி ஆர்.நாச்சி முத்து, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி ஆகியோர் உரையாற்றினர். கிளைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். அவிநாசி: சேவூர் செல்லும் சாலையில் உள்ள கொடி மரத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் கொடியினை சங்கத்தின் மூத்த உறுப்பினர் பழனி ஏற்றி வைத்தார். இதையடுத்து ராமமூர்த்தி நினைவகம் முன்பு சங்கத்தின் மூத்த தலைவர் ரமணி நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொ டர்ந்து, ராமமூர்த்தி நினைவகம் உள்ளரங்கில் சிஐடியு அமைப்பு தின பேரவை கூட்டம் நடைபெற்றது. இப்பேர வைக்கு சிஐடியு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலை ஏற்றார். இதில், சிஐ டியு மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார், விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளனத் தலைவர் பி.முத்துசாமி, சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.ராஜன், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, சிஐடியு உபகுழு கன்வீனர் ஆர்.பழனிச்சாமி, அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் தலை வர் வளர்மதி, செயலாளர் இந்திராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.