சேலம், நவ.21- சேலத்தில் குழந்தைகள் வார விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு பாரம்ப ரிய விளையாட்டுப் போட்டி ஆர்வத்துடன் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பங்கேற் றனர். நவம்பர் 14ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் ஒரு வாரத்திற்கு குழந்தை கள் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சைல்ட்லைன் குழந்தைகள் உதவி மையம் மற்றும் டான் பாஸ்கோ இல் லம் இணைந்து 15க்கும் மேற்பட்ட அரசு பள்ளி குழந்தைகள் பங்கேற்ற நிகழ்வு நடை பெற்றது. சேலம் மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், அரசு பள்ளி குழந்தைகள் மற்றும் காவல் துறையி னரின் குழந்தைகளுக்கு இடையே பாரம் பரிய விளையாட்டுப் போட்டிகளான கயிறு இழுக்கும் போட்டி ,சாக்குப் போட்டி, உறியடி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடைபெற்றது. இப்போட்டியில் குழந்தை கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.