districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கோவை, ஜூன் 11- பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமீன் வேண்டி மனு அளித்திருந்தார். ஆனால், நீதிபதி அந்த மனுவை ஒத்திவைத்து உத்தர விட்டார். பெண் காவலர்கள் குறித்து அவதுறாக பேசிய யூடியுபர்  சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர போலீசார் பதிவு  செய்த வழக்கில் ஜாமின் வேண்டி கோவை ஒருங்கி ணைந்த நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு அளித்திருந்தார். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வியாழன்று நீதிபதி சரவண பாபு முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர்  தரப்பு வழக்கறிஞர் திருச்சி மற்றும் சென்னை வழக்குகளில் ஜாமின் கிடைத்ததை முன்வைத்து வாதாடினர். மேலும், சவுக்கு சங்கர் குறிப்பிட்டு பேசிய காவல் உயர் அதிகாரி யான கூடுதல் தலைமை இயக்குநர் தரப்பில் இருந்து எந்த  புகாருக்கும் வராததை அடுத்து ஜாமின் அளிக்க வேண்டு மென கேட்டுக்கொண்டனர். பின்னர், ஜாமின் மனுவை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மனு மீதான உத்தரவு புத னன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமங்களில் இருக்கும் குளங்களுக்கு தண்ணீர் விட விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, ஜூன் 11- திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளில் இருந்து உடு மலை மற்றும் மடத்துக்குளம் கிராமங்களில் உள்ள குளங்க ளுக்கு தண்ணீர் திறத்து விட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலூகா பகுதிகள் பல  கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளது. இந்நிலை யில் வரும் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற தெரிவித்துள்ளனர். மேலும், தண்ணீரின் தேவை  அதிகமாக இருக்கும் என்பதால், கிராமங்களில் உள்ள  அனைத்து குளம் மற்றும் குட்டைகளுக்கும் திருமூர்த்தி மற் றும் அமராவதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண் டும். குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் இருந்தால், சுற்று  வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் ஆழ்குழாய்கள் மூலம் மக்களின் தண்ணீர் தேவையைப்  பூர்த்தி செய்யவும், கால்நடைகளின் தண்ணீர் தேவையை  பூர்த்தி செய்ய முடியும். எனவே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை தாலூகா ஆலாம் பாளையம் கிராமத்தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பூசாரி நாயக்கர் குளத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து முறையாக தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல் உள்ள தால், அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆம்புலன்ஸ் ஊழியர் பணி: 20 பேர் தேர்வு

நாமக்கல், ஜூன் 11- நாமக்கல்லில் நடை பெற்ற நேர்முக தேர்வில்,  கால்நடை மருத்துவ ஆம்பு லன்ஸ் பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல்லில் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர் மற்றும் உதவியா ளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாமக்கல் பழைய  மாவட்ட அரசு மருத்துவ மனை வளாகத்தில் உள்ள  108 ஆம்புலன்ஸ் சேவை  அலுவலகத்தில் நடைபெற் றது. கால்நடைத்துறை மண் டல மேலாளர் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளர் மனோஜ், வாகன பராமரிப்பு மேலா ளர் மணிராஜ் ஆகியோர் நேர் முக தேர்வை நடத்தினர். இதில், நாமக்கல், திருச்சி,  ஈரோடு, கோவை மாவட்டங் களைச் சேர்ந்த 60க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்ட னர். அப்போது, அவர்களின் கல்வி சான்றிதழ், ஓட்டுநர்  உரிமம் போன்ற ஆவணங் கள் சரி பார்க்கப்பட்டது. இறு தியில், ஓட்டுநர் பணிக்கு 5  பேரும், 15 பேர் உதவியாளர்  பணிக்கு தேர்வு செய்யப்பட்டது.

பேட்டி கொடுக்க முடியாது: அண்ணாமலை

கோவை, ஜூன் 11- இனி செய்தியாளர்கள் ஓடிவந்து மைக்கை நீட்டும் நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுக்க முடியாது என கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அங்கு வந்த செய்தியாளர்களை பார்த்து, இனி செய்தியாளர்கள் ஓடிவந்து மைக்கை  நீட்டும் நேரத்தில் எல்லாம் பேட்டி கொடுக்க  முடியாது. பேட்டி கொடுக்க தேவை ஏற் பட்டால் முறைப்படி தலைமையில் இருந்து தகவல் 24 மணி நேரத்திற்கு முன்பாக செய்தி யாளர்களுக்கு தெரிவிக்கப்படும், என்றார். தேர்தல் நேரத்தில், எப்பொழுதும் செய்தியா ளர்களை பார்த்தவுடன் ஓடி வந்து பேட்டி  அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்த அண் ணாமலை. இப்போது தோல்வி அடைந்த நிலையில் விரக்தியின் உச்சத்திற்கு சென்று பேட்டி அளிக்க முடியாது என புலம்புகிறார்? என செய்தியாளர்கள் பேசிச்சென்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க கோரிக்கை

தருமபுரி, ஜூன் 11- நல்லம்பள்ளி அருகே சாலையோர மிருந்த மரங்களை அழித்து, அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட் டம், பாகலஹள்ளி ஊராட்சி எல்லை பகுதி யான, குரும்பட்டி முதல் ஏலகிரி ஊராட்சிக் குட்பட்ட கடுதுகாரம்பட்டி வரை, 3 கிலோ மீட்டர் நீள சாலை உள்ளது. கடந்த 10 ஆண்டு ளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வரு கின்றனர். இதனிடையே, சாலை கடுமை யாக சேதமடைந்ததைத் தொடர்ந்து, சாலை ஆக்கிரமிப்பு வேலைகளும் துவங்கியது. இச்சாலை, மழைநீர் கால்வாயுடன் சேர்த்து,  36 அடி அகலத்தில் அரசு புறம்போக்கு நிலம் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால், தற்போது 10  அடி அகலம் மட்டுமே சாலை மிஞ்சியுள் ளது. மேலும், இச்சாலையின் இருபுறங்களி லும், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர் வாகத்தின் மூலம், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. கடு மையான வறட்சியிலும் தண்ணீர் ஊற்றி,  மரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலை யில், பச்சியப்பன்கொட்டாய் அருகே சாலை யின் இருபுறங்களிலும் அரசுக்கு சொந்த மான இடத்திலிருந்த மரங்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கபட்டு வந்த மரங்கள் உள்ளிட்டவை வெட்டி சாய்க்கப் பட்டன.  இந்த தொடர் ஆக்கிரமிப்பு மற்றும் மரங் கள் வெட்டபடுவது குறித்து, வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார ளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. எனவே, அரசு புறம்போக்கு நிலங்களை அள வீடு செய்து, முட்டுகல் அமைக்க வேண்டும். மேலும், மரங்களை வெட்டியவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.