districts

விநாயகர் சிலை ஊர்வலம்: பள்ளிவாசல் அருகே தகராறில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மீது வழக்கு

பொள்ளாச்சி, செப்.4- பொள்ளாச்சியில் விநாயகர் சிலை ஊர் வலத்தின்போது, பள்ளிவாசல் அருகே இஸ் லாமியர்களுடன் தகராறில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் 3 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த ஆக்.31 ஆம் தேதி யன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத் தப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் ஊர்வல மாக எடுத்து சென்றனர். அப்போது அந்த  பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழு கைக்கு இடையூறாக இந்து அமைப்பினர் மேளம் அடித்துக் கொண்டு வந்ததாக தெரி கிறது. இதன் காரணமாக இருதரப்பினருக் கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் பின் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து ஊர்வலத்தை அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இஸ்லாமிய அமைப் பினர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலை யத்திற்கு சென்று புகார் கொடுத்து, சம் பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய தாமதப்படுத்தியதால் ஆவேச மடைந்த இஸ்லாமிய அமைப்பினர் உடு மலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தீபசுஜிதா மறிய லில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வழக்குப்பதிவு செய்யா மல் மறியலை கைவிட மாட்டோம் என்று தெரி வித்தனர். இதன்பின் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரி நாராயணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர். இதைய டுத்து பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களான ஆனந்தன், நாராயணமூர்த்தி, லட்சுமணன் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

;