districts

img

பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து - 6 பேர் படுகாயம்

கோவை, டிச.21- சூலூர் அருகே நீலாம்பூரில் மூன்று  கல்லூரி பேருந்து பளுக்கு பின்னால் வந்த அரசு பேருந்து பின்பக்க மாக மோதியதில் கல் லூரி வாகனங்கள் ஒன் றன் மீது ஒன்று மோதி  விபத்துக்குள்ளானதில், 6 பேர் படு காயமடைந்தனர். கோவை மாவட்டம், காளப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்துகள் திங்களன்று மாலை கல்லூரியிலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சூலூர், பல்லடம், திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தன. அப்போது, அவர்களுக்கு எதிர்திசையில் தவறான பாதையில் ஒரு இருசக்கர வாகனம் வந்தது. இதனையறிந்த பேருந்தின் ஓட்டுனர் இருசக்கர வாகனத்திற்கு வழிவிட நினைத்தார். பேருந்தின் இடதுபுறம் ஒரு லாரி ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்ததால், கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் திடீரென சாலையில் பேருந்தை நிறுத்தினார். இதனையடுத்து அதற்குப் பின்னால் வந்த இரு கல்லூரி பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக நின்றன.  அப்போது அவ்வழியே அவினாசியை நோக்கி வேகமாக வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கடைசியாக நின்றிருந்த கல்லூரிப் பேருந்தின் பின்னால் மோதியது.

இதில், நின்று கொண்டிருந்த மூன்று கல்லூரி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தில் சென்ற இரண்டு பயணிகள் மற்றும் கல்லூரிப் பேருந்தில் இருந்த 4 மாணவர்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த சூலூர் காவல் துறையினர் கல்லூரிப் பேருந்து மற்றும் அரசு பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும், படுகாயமடைந்தவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;