சேலம், ஜூலை 13- திரையரங்கு மேலாளரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சேலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் பிர பலமான திரையரங்கம் மற்றும் திரு மண மண்டபம், அதன் தொடர்பு டைய 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துக்கள் அனைத்தும் இளையாழ்வார் என்பவருக்கு சொந் தமானது. இளையாழ்வர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த நிலை யில், அவரது மூத்த மகள் அம்பு ஜரம், அவரது உறவினர்கள் பெய ரில் உள்ளது. திரையரங்கு மேலா ளராக ஆத்தூரைச் சேர்ந்த அங்க முத்து உள்ளார். இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த நரேஷ் குமார், கீதேசன் ஆகியோரிடம் சொத்து தொடர்பாக பவர் பத்தி ரம் வாங்கி உள்ளதாகவும், பவர் பத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், திரையரங்கை தொடர்ந்து நீ நடத் தக்கூடாது என்றும், திருமண மண் டபம் அதன் தொடர்புடைய கடை கள் வாடகை அனைத்தையும் வசூல் செய்து தன்னிடம் தர வேண்டும் எனவும் திரையரங்கு மேலாளர் அங்க முத்துவை, பாஜக சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவரான அருள் என்ற அருள்பிரகாஷ் (50) என்பவர் தொலைபேசியில் மிரட்டி யுள்ளார். இதுதொடர்பாக நரேஷ்குமா ரின் மனைவி கிருஷ்ணவேணியி டம் அங்கமுத்து கேட்டபோது, அவ ரும் அங்கமுத்துவை மிரட்டியுள் ளார். இதுகுறித்து அங்கமுத்து ஆத் தூர் நகர காவல் நிலையத்தில் புகா ரளித்தார். அதன்பேரில் ஆத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருள்பிரகாசை கைது செய்தனர். மேலும், நரேஷ்குமார் மற்றும் அவ ரது மனைவி கிருஷ்ணவேணி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வரு கின்றனர். ஏற்கனவே, அருள் பிர காஷ் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் சேலம் மாவட்டத் தில் உள்ள பல்வேறு காவல் நிலை யங்களில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.