திருப்பூர் டிச.14- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகா தார நிலையங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப் பட்டது தொடர்பாக தேசிய சுகாதார பணி ஆணைய குழுவி னர் கணக்கு தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 17 ஆரம்ப சுகா தார நிலையங்களில் தேசிய சுகாதார பணி ஆணைய குழுவி னர் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியில் எந்த வசதிகளும் செய்யா மல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டறிந்தனர்.
இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை யில் வழங்கப்பட்ட நிதியின் கணக்குகளை தணிக்கை செய்ய சென்னை (என்.எச்.எம்) தேசிய சுகாதார பணி ஆணை யத்தை சேர்ந்த சித்ரா தலைமையிலான குழுவினர் உத்தர விட்டனர். அதன்படி செவ்வாயன்று திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மகப்பேறு ஆரம்ப சுகாதார மையத் தில் உள்ள கூட்ட அரங்கில் கணக்கு தணிக்கை ஆய்வு நடைபெற்றது. முதற்கட்டமாக நெசவாளர் காலனி, டி.எஸ்.கே, 15.வேலம்பாளையம், நல்லூர், குருவாயூரப்பன் நகர், கோவில்வழி உள்ளிட்ட 8 ஆரம்ப சுகாதார மையங்க ளின் கணக்குகள் தணிக்கை செய்யும் பணியில் அதிகாரி கள் ஈடுபட்டனர். முன்னதாக, ஆரம்ப சுகாதார மையங்களில் குறைந்த அளவில் பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டது ஏன் என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கை உள்ளிட்ட உட்கட்ட மைப்பு வசதிகள் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்தே தணிக்கை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.