districts

img

வீரபாண்டியன் மீது தாக்குதல் முயற்சி திருப்பூரில் சிபிஐ ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 6 -  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர்  மூ.வீரபாண்டியன் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்த  முயற்சித்ததைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. வீரபாண்டியன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சமூகவி ரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி செவ்வா யன்று திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர்  மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் மாநி லக்குழு உறுப்பினர் எம்.ரவி, மண்டலச் செயலாளர்கள் எஸ். செல்வராஜ் எம்.சி., வி.எஸ்.சசிக்குமார், ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.