districts

img

போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி

நாமக்கல், பிப்.23- நாமக்கல்லில் ஞாயிறன்று நடைபெற்ற போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். நாமக்கல் சட்ட உரிமைகள் சேவை இயக்கம் மற்றும்  மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு சிலம்பம் பேரணி  ஞாயிறன்று நாமக்கல் அண்ணா சிலை அருகிலிருந்து துவங்கி யது. நாமக்கல் நகர காவல் ஆய்வாளர் குணசேகரன் கொடி யசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 200க்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, சிலம்பம் சுற்றிய வாரே ஊர்வலமாக சென்றனர். போதைப்பொருட்களால் ஏற் படும் தீமைகள் குறித்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங் கள் வழங்கப்பட்டன. பரமத்தி சாலை, கோட்டை சாலை,  பழைய பேருந்து நிலையம், பார்க் சாலை வழியாக காந்தி  சிலை அருகே பேரணி நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.