districts

img

ராமச்சந்திராபுரம் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி

திருப்பூர், செப். 21 - உடுமலைபேட்டை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம் ராமச் சந்திராபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு முன்னாள் மாணவர் கள் கணினி மற்றும் நகலெடுக்கும் (ஜெராக்ஸ்) இயந்திரம்  ஆகியவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளார்.  1994-95 ஆம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாண வர்கள் கடந்த ஆகஸ்ட் 28 அன்று ராமச்சந்திராபுரம் பள்ளியில்  சந்திப்புக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவையான பொருட்கள் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் தெரி வித்தனர். இதன் அடிப்படையில், முன்னாள் மாணவர்கள் தேவையான கணினி செட், நகலெடுக்கும் இயந்திரம் ஆகிய வற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு ஆசிரியர் அங்குராஜ் தலைமை ஏற்றார்.  முன்னாள் மாணவர்கள் சசிக்குமார், சந்திரசேகர், விஜயகு மார், ஆனந்த ஜோதி, ஓம் பிரகாஷ் ஆகியோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா மற்றும் பள்ளிஆசிரியர்களிடம் மேற் படி உபகரணங்களை ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் பள்ளி  மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.