districts

img

காட்டு யானைகளால் விவசாய பயிர் சேதம்

தருமபுரி, செப்.14- பாலக்கோடு அருகே கூலன் கொட்டாய் கிராமத்தில் உணவு தண் ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்த மூன்று காட்டு யானை விவசாய பயிர் களை சேதப்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதி யில் இருந்து அடிக்கடி காட்டு யானை கள் ஊருக்குள் நுழைந்து வருகிறது.  பாலக்கோடு அருகே கூலன் கொட் டாய் கிராமத்தில் செவ்வாயன்று இரவு உணவு, தண்ணீர் தேடி 2  ஆண் யானைகள், ஒரு பெண் யானை  என மொத்தம் 3 காட்டுயானைகள் வந்தன. இந்த யானைகள் சின்னபாப் பன், முனிராஜ், திம்மராஜ், சின்ன ராஜ் ஆகியோரின் நெல், வாழை, மா  தோட்டத்திற்குள் நுழைந்தது. இதில், மாமரத்தை சாய்ந்துள்ள நிலையில், வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட  பயிர்களை மிதித்து சேதப்படுத்தி யது. மேலும், மின்மோட்டார், தண்ணீர் குழாய்களை சேதப்படுத்தியது. இதையடுத்து கிராம மக்கள் பாலக் கோடு வனத்துறைக்கு தகவல் தெரி வித்தனர். வனத்துறையினர் அப்பகு தியில் முகாமிட்டு போலுமலை காப் புக் காட்டிற்கு 3 காட்டு யானைக ளும் விரட்டினர். இதுகுறித்து அப்ப குதி விவசாயிகள் கூறுகையில், அடிக் கடி யானைகள் இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து விவசாய பயிர் களையும், மாந்தோட்டங்களையும் அழித்து வருகிறது. அரசாங்கம் தரும் நஷ்ட ஈடு போதுமானதாக இல்லை.  மேலும், இக்கிராமத்தில் இதுவரை எங்குமே தெருவிளக்கு அமைக்கப் படாமல் கிராமமே இருளில் மூழ்கி  உள்ளதால் தான் யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விடுகிறது. யானைக்கு பயந்து உடல் உபாதை களை கழிக்க கூட வெளியே வர பயப் படுகின்றனர். எனவே, எங்கள் கிராமத்திற்கு தெருவிளக்கு அமைத்து தர வேண் டும். யானைகள் கிராமத்திற்குள் நுழையாதவாறு வனத்தில் வேலி  அமைக்க வேண்டும். பயிர் இழப் பீட்டு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர்.

;