districts

img

திருப்பூரில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை உடனே நிரப்ப வழக்கறிஞர் சங்க மாநாடு கோரிக்கை

திருப்பூர், செப். 24 - திருப்பூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலி யாக உள்ள நீதிபதி பணியிடங்களை உயர்நீதி மன்றம் உடனடியாக நிரப்ப அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் திருப்பூர் மாவட்ட நான்காவது மாநாடு  சனிக்கிழமை பல்லடம் சாலை தனியார் வளா கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பொ.மோகன் தலைமை  ஏற்றார். மாநிலச் செயலாளர் அ.மணவாளன்  வரவேற்றார்.  இம்மாநாட்டை மாநிலப் பொதுச் செயலா ளர் என்.முத்து அமுதநாதன் தொடக்கி வைத் துப் பேசினார். மாவட்டச் செயலாளர் எஸ். பொன்ராம் வேலையறிக்கை முன்வைத்தார்.  மாவட்டப் பொருளாளர் எஸ்.வரதராஜ் வரவு  செலவு அறிக்கை முன்வைத்தார். இம்மாநாட்டில் சங்கத்தின் மாநில செயல்  தலைவரும், பார் கவுன்சில் உறுப்பினரு மான ஏ.கோதண்டம், “வழக்கறிஞரும், பார்  கவுன்சிலும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். 

தீர்மானங்கள்

இம்மாநாட்டில், அகில இந்திய பார் கவுன் சில் வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை  ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாநில அரசு தமிழ்நாடு பார் கவுன்சில் வழக் கறிஞர்களுக்கு சேம நல நிதியை ரூ.10 லட்ச மாக உயர்த்தி அறிவித்ததை வரவேற்பது டன், அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். வழக்கறிஞர்க ளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் நிரந்தர மருத் துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வர வேண் டும். பத்திரப்பதிவு செய்வதை வழக்கறி ஞர்களுக்கு மட்டும் அனுமதிக்க சட்ட மாறு தல் செய்ய வேண்டும். பிறப்பு, இறப்புச்சான்று  தொடர்பான வழக்குகள், வாடகை ஒப்பந்தம்  தொடர்பான வழக்குகள், குழந்தைகள் தத்து  கொடுப்பது தொடர்பான வழக்குகள் போன்ற வற்றை நீதிமன்றங்களிலேயே தாக்கல் செய்து நடத்த வேண்டிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் அனைத்து வசதிகளு டன் வழக்கறிஞர்கள் அறைகள் கட்டுவதற்கு  இடம் ஒதுக்குவதுடன், அதற்கான நிதியை யும் தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இங்கு  வழக்கறிஞர்களுக்கு விளையாட்டு மையம் அமைத்து தர வேண்டும். அனைத்து வழக்க றிஞர்களும் பயன்படுத்தும் வகையில் எண் ணியல் (டிஜிட்டல்) நூலகம், அஞ்சல் நிலை யம், வங்கி வசதி, வழக்கறிஞர் கூட்டுறவு சங் கம் அமைத்துத் தர வேண்டும். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் 2021-ஐ  உடனே அமல்படுத்த வேண்டும், திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் குறிப்பிட்ட கால இடை வெளியில் பெஞ்ச் - பார் கூட்டம் நடத்த வேண் டும். தொடக்க நிலை இளம் வழக்கறிஞர் உத வித் தொகையை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தி,  அனைத்து வழக்கறிஞர்களுக்கும் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் சிலை வைக்க வேண்டும். பழைய நீதிமன்ற வளாகத்தில் புதிதாக வரவுள்ள நீதிமன்றங்கள், சிறார்  நீதிக்குழுமம், நுகர்வோர் குறை தீர் ஆணை யம் ஆகியவற்றை நிறுவி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

இம்மாநாட்டில் வழக்கறிஞர் சங்கத்தின்  திருப்பூர் மாவட்டப் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாவட்டத்  தலைவராக கே.சுப்பராயன், துணைத் தலை வர்களாக எஸ்.கண்ணன், வி.சேகர், எஸ். ஏ.தமயந்தி, கே.கோபாலகிருஷ்ணன், மாவட் டச் செயலாளராக பி.மோகன், துணைச் செய லாளர்களாக எஸ்.பொன்ராம், என்.நவீன்,  எஸ்.வினோத்குமார், ஜி.கௌரி மற்றும் ஏழு  பேர் கமிட்டி உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து மாநி லத் துணைத்தலைவர் வ.ராஜமாணிக்கம் உரையாற்றினார். முடிவில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.தமயந்தி நன்றி கூறி னார்.

 

;