கோவை, நவ.23- கோவை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத் துவது மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் நடைபெற்றது. கோவை விமான நிலையம் சர்வ தேச விமான நிலையமாக உள்ளது. இங்கிருந்து உள்நாடு மற்றும் வெளி நாடுகளுக்கு தினமும் விமா னங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் தொழில்துறை யினர் பயன் அடைந்து வருகின் றனர். 2021 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கால கட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 3,127 விமானங்களும், சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமானங்கள் மட்டுமே இயக்கப் பட்டன. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் 5 மாதத் தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங் களும் என 7,382 விமானங்கள் இயக் கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலை யில், தற்போது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள் ளதாக விமான நிலைய ஆணைய ரகம் தெரிவித்துள்ளது. இது மேலும், அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், பயணிகளின் எண்ணிக்கை, விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. மேலும், அவநாசி சாலையில் நடைபெறும் மேம்பாலப்பணிகளின் காரணமாக விமான நிலைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரு கிறது. இதனால் விமான நிலை யத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதி யடைகின்றனர். இதனை ஒழுங்கு படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், கோவை விமான நிலைய ஆலோசனை குழு கூட்டம், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் விமான நிலை யத்தின் இயக்குநர், மாவட்ட வரு வாய் அலுவலர், கோவை மாநக ராட்சி ஆணையாளர், காவல்துறை இணை ஆணையாளர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துணை கமேண்டன்ட் உள்ளிட்ட ஆலோ சனை குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர். முன்னதாக இந்த கூட்டத்தில், விமான நிலையத்தின் தற்போதைய தேவைகள் குறித்தும், பராமரிப்பு, விமான நிலையத்திற்கான பாது காப்பு நடவடிக்கைகள், பொது மக்களின் தேவைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. மேலும், கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும் விமான நிலைய இயக்குநர் பேசினார்.