districts

img

தனியார் செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் அடாவடி

கோவை, செப்.13- ஸ்ரீசாய் என்ற தனியார் செவிலி யர் பயிற்சி நிறுவனம் இலவசமாக பயிற்சி தருகிறோம் என்றழைத்து  அசல் சான்றிதழை பெற்றுக்கொண்டு மொத்த பணமும் கட்ட வேண்டும் என அப்பாவி ஏழை, எளிய பெண்களிடம் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றஞ் சாட்டி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.  கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த கோட்டூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற மாணவி, அர சுப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடிந் துள்ளார். இதனிடையே 26.06.2022 ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள ஸ்ரீசாய் என்ற தனியார் செவி லியர் பயிற்சி நிர்வாகத்தினர், கிருஷ் ணவேணியை தொடர்பு கொண்டு, “எங்கள் நிறுவனத்தில் ஏழை, எளிய, குடும்பத்தைச் சேர்ந்த 5 மாணவி களுக்கு இலவசமாக பயிற்சி வழங் கும் திட்டம் உள்ளது” என்று கூறியுள் ளனர். மேலும், கிருஷ்ணவேணியி டம் சேர்க்கை கட்டணம் ரூ.3 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும் என் றும், மீதமுள்ள 2 ஆண்டு பயிற்சி கட்டணத்தை செலுத்த தேவை யில்லை என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து அந்த நிறுவ னம் மூன்று மாதம் விடுதியில் தங்கி  பயிற்சி பெற வேண்டும் எனவும், பயிற்சி முடிந்தவுடன் வெளியே மருத் துவமனைக்கு சென்று செவிலியர்க ளுக்கான செயல்முறை பயிற்சி அளிக் கப்படும், என்றுள்ளனர்.  இந்நிலையில், பயிற்சி நிறுவனத் தில் இரண்டு வாரம் மட்டும் பயிற்சி அளித்து, அதன்பிறகு நியோ –  அர்தோ என்ற தனியார் மருத்துவம னையில் 24 மணி நேரம் செவிலியர் பயிற்சியில் இருந்தே ஆக வேண்டும் என நிர்பந்தித்துள்ளனர். இதனால் ஸ்ரீசாய் நிறுவனத்தில் படிக்க விருப் பம் இல்லாததால் கிருஷ்ணவேணி, தனது அசல் சான்றிதழ்களை கேட் டுள்ளார். அதற்கு ஸ்ரீசாய் நிறுவனம் இந்த கல்வியாண்டின் முழு கட்ட ணத்தை செலுத்தினால் மட்டுமே அசல் சான்றிதழ்களை திருப்பி தரு வோம் என்று கூறியுள்ளனர். மாணவி கிருஷ்ணவேணியின் தந்தை கூலி வேலை செய்து, தன் மகளை படிக்க வைத்து வருகிறார். எனவே பணத்தை  கட்டி அசல் சான்றிதழ்களை பெறு வதற்கு போதிய வசதிகள் இல்லை. ஆகையால், மாணவி கிருஷ்ண வேணியின் அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக் கப்பட்டோருடன், இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இந்நிகழ்வில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அசாருதீன், மாவட்ட துணைத்தலைவர் கயல் விழி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் கண்ணன், குமரன் உட்பட திரளான மாணவர்கள் உடனிருந்த னர்.

;