தருமபுரி, அக்.9- தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையை ரூ.3.5 கோடி உலக வங்கி நிதி உதவியுடன் தரம் உயர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி அரசு தலைமை மருத் துவமனை கடந்த 2008 ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மருத்துவம னையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 500 படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு, 16 அறுவை சிகிச்சை அரங்குகள், விபத்து அவ சர சிகிச்சை பிரிவு உட்பட 28 சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனைக்கு தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் புற நோயாளி களாக சிகிச்சை பெற வருகின்றனர். அதேபோல் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 235 மருத்துவர்கள், 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 300க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். இந் நிலையில், அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அளிக்கப் படும் சிகிச்சையின் தரத்தை மேலும் உயர்த்த உலக வங்கி ரூ.3.5 கோடி நிதி உதவி அளிக்கவுள்ளது. இந்த நிதி மூலம் இந்த மருத்துவமனை யில் உள்ள அவசர சிகிச்சை பிரிவை ரூ.75 லட்சம் மதிப்பில் மேம்படுத்த வும், அனைத்து வார்டுகளையும் நவீனமயமாக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தருமபுரி மாவட்டத்தில் மட்டுமின்றி அருகே உள்ள கிருஷ்ணகிரி, திருப் பத்தூர், திருவண்ணாமலை மாவட் டங்களில் இருந்தும் பொதுமக்கள் கணிசமான அளவில் சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். இதனால் மாநகர பகுதிகளில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு இணை யாக இங்கு அனைத்து மருத்துவ வசதிகளை ஏற்படுத்தவும், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதி யாக உலக வங்கி ரூ.3.5 கோடி நிதி உதவி அளிக்கவுள்ளது. இந்த நிதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து சிறப்பு குழுவி னர் அண்மையில் இங்கு ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த நிதி மூலம் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்களுக்கு அளிக் கப்படும் சிகிச்சையின் தரத்தை மேலும் உயர்த்த தேவையான நட வடிக்கைகள் எடுக்கப்படும், என்ற னர்.