உடுமலை, ஜூலை 4- ஊராட்சி பகுதிகளில் உள்ள ரிசர்வ் மனைகளை விற்பனை செய் யும் அளவிற்கு ஊழல் செய்யும் சின்ன வீரம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின் னவீரம்பட்டி ஊராட்சியில் பொது பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரிசர்வ் மனைகளை விற்பனை செய் யும் அளவிற்கு ஊராட்சி நிர்வாகம் ஊழல் செய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டு மனை இல்லாத ஏழை மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சின்னவீரம் பட்டி யில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட துணை சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். எம்.ஜி.ஆர் நகர் குடியி ருப்பு இடத்தை வருவாய்த்துறை ஆவணப் பதிவேடுகளில் பதி வேற்றம் செய்து, முறையான பட்டா மாறுதல் செய்து தர வேண்டும். அனைத்து மக்களுக்கும் சுகாதார மான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதி யில் இருக்கும் அனைத்து சாலைக ளையும் சீர் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்ன வீரம்பட்டி பேருந்து நிலையம் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த உறுப்பினர் மு.கருமலை யப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மது சூதனன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரச்செயலாளர் தண்டபாணி, நகரக்குழு உறுப்பி னர்கள் விஸ்வநாதன், தோழன் ராஜா, வசந்தி, சித்ரா, கருப்புசாமி, ஜஹாங்கீர் மற்றும் கிளை செயலாளர் கள் கனகராஜ், நாகவேணி, மாலினி, சுந்தரம், மகேஸ்வரி, ரத்தினசாமி, ராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.