districts

img

சிக்கய்ய கல்லூரியின் கால் நூற்றாண்டு போராட்டம்

ஈரோடு, ஜுலை 8- கால் நூற்றாண்டு கால போராட் டத்தில் பேராசிரியர்களில் பங்க ளிப்பு குறித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத் தின் ஈரோடு மாவட்ட கிளைக் கூட்டம் ஒற்றுமை அரங்கில் நடை பெற்றது.  இந்த நிகழ்விற்கு, தலைவர் கே.ஆர்.பரமசிவம் தலைமை வகித் தார். இதில், சிக்கய்ய நாயக்கர்  கல்லூரி மீட்பு இயக்கம் - பொது மக்களின் பங்கு என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பி னரும், சிக்கய்ய நாயக்கர் கல் லூரியின் முன்னாள் மாணவரு மான ப.மாரிமுத்து சிறப்புரையாற் றினார்.   சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை  அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று  ஏறத்தாழ கால் நூற்றாண்டு கால  போராட்டம், பங்களிப்பு, பகிர்ந்து  கொள்ளும் வகையில் கல்லூரி யின் முன்னாள் மாணவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முன்னாள் மாவட்ட செயலாளரு மான கே.துரைராஜ் வாழ்த்தி பேசி னார். முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் நினைவு களை பகிர்ந்து கொண்டனர்.

ஈரோடு நகரத்தின் மையத்தில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அமைந் துள்ளது. தந்தை பெரியாரின் வழி காட்டுதலின்படி பொதுமக்களிடம் நிலமும், பணமும் பெற்று மகாஜன  பள்ளிக் குழுமத்தால் இக்கல்லூரி நிறுவப்பட்டது. 1954ஆம் ஆண்டு மகாஜன கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1959ஆம் ஆண்டு சிக்கய்ய நாயக் கர் மகாஜன கல்லூரி என்றும்,  1970ஆம் ஆண்டில் சிக்கய்ய நாயக் கர் கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது. லயோலா, செயின்ட் ஜோசப் கல்லூரிகளைப் போன்று சிஎன்சியும் மாநிலத்தில் முக்கிய கல்லூரியாகும். இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி உள்ளிட்ட பல ஆளுமைகள் இங்கு  பயின்றவர்கள் ஆவர். அரசு உதவி பெறும் கல்லூரி யாக இருந்தாலும், முற்றிலும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று  போராட்டம் நடைபெற்றது. கடந்த  17 ஆண்டுகளாக அரசின் நேரடி நிர் வாகத்தில் செயல்பட்டாலும், 2022 ஆம் ஆண்டு தான் முழுமையான அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல அனுபவ பகிர்வுகள் பகிரப்பட்டன. செயலர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்வின் இறுதியாக கண்ணம்மாள் நன்றி கூறினார். நிதியளிப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு நடத்தும்  இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கு பேராசிரியர்கள் ரூ.6500 வசூலித்து கொடுத்தனர். 

;